Ads

இந்தியா – வேளாண்மை -10th Std Social Science- Book Back Question And Answer

இந்தியா – வேளாண்மை -10th Std Social Science- Book Back Question And Answer 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.

அ) வண்டல்

ஆ) கரிசல்

இ) செம்மண்

ஈ) உவர் மண்

விடை:

இ செம்மண்

Question 2.

எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

ஆ) இந்திய வானியல் துறை

இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்

ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்

விடை::

அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

Question 3.

ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….

அ) செம்மண்

ஆ) கரிசல் மண்

இ) பாலைமண்

ஈ) வண்டல் மண்

விடை:

ஈ) வண்டல் மண்

Question 4.

இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….

அ) ஹிராகுட் அணை

ஆ) பக்ராநங்கல் அணை

இ) மேட்டூர் அணை

ஈ) நாகர்ஜூனா சாகர் அணை

விடை:

ஆ) பக்ராநங்கல் அணை

Question 5.

………………. என்பது ஒரு வாணிபப்பயிர்.

அ) பருத்தி

ஆ) கோதுமை

இ) அரிசி

ஈ) மக்காச் சோளம்

விடை:

அ) பருத்தி

Question 6.

கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.

அ) வறண்ட மண்

ஆ) உவர் மண்

இ) மலை மண்

ஈ) பருத்தி மண்

விடை:

ஈ) பருத்தி மண்

Question 7.

உலகிலேயே மிக நீளமான அணை ………….

அ) மேட்டூர் அணை

ஆ) கோசி அணை

இ) ஹிராகுட் அணை

ஈ) பக்ராநங்கல் அணை

விடை:

இ ஹிராகுட் அணை

Question 8.

இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….

அ) பருத்தி

ஆ) கோதுமை

இ) சணல்

ஈ) புகையிலை

விடை:

இ சணல்

II. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

Question 1.

கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.

காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி

விடை:

இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 2.

கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.

காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

விடை:

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்

III. பொருந்தாதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

அ) கோதுமை

ஆ) நெல்

இ) திணை வகைகள்

ஈ) காபி

விடை:

ஈ) காபி

Question 2.

அ) காதர்

ஆ) பாங்கர்

இ) வண்டல் மண்

ஈ) கரிசல் மண்

விடை::

ஈ) கரிசல் மண்

Question 3.

அ) வெள்ளப் பெருக்க கால்வாய்

ஆ) வற்றாத கால்வாய்

இ) ஏரிப்பாசனம்

ஈ) கால்வாய்

விடை:

இ ஏரிப்பாசனம்

IV. பொருத்துக .

விடை:

V. சுருக்கமாக விடையளி.

Question 1.

‘மண்’ – வரையறு

விடை:

மண் என்பது கனிமங்களின் கூட்டுப்பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

Question 2.

இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

விடை:

வண்டல் மண்

கரிசல் மண்

செம்மண்

சரளை மண்

காடு மற்றும் மலை மண்

வறண்ட பாலை மண்

உப்பு மற்றும் காரமண்

களிமண் மற்றும் சதுப்புநில மண்

Question 3.

கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.

விடை:

நிறம் :

டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.

மண்ணின் தன்மைகள் :

ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.

Question 4.

‘வேளாண்மை ‘ – வரையறு.

விடை:

வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

Question 5.

இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.

விடை:

தன்னிறைவு வேளாண்மை

இடப்பெயர்வு வேளாண்மை

தீவிர வேளாண்மை

வறண்ட நில வேளாண்மை

கலப்பு வேளாண்மை

படிக்கட்டு முறை வேளாண்மை

Question 6.

இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.

விடை:

காரிஃப் பருவம் – ஜூன்- செப்டம்பர்

ராபி பருவம் – அக்டோபர் – மார்ச்

சையத் பருவம் – ஏப்ரல் – ஜூன்

Question 7.

இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.

விடை:

தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்

Question 8.

கால்நடைகள் என்றால் என்ன?

விடை:

கால்நடைகள் இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும். கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.

இவை சமூக, கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் தன் பங்களிப்பை தருகின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

Question 9.

இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

விடை:

கடல் மீன்பிடிப்பு:

கண்டத்திட்டு பகுதிகளில் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.

கேரளா கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாகவே உள்ளது.

உள்நாட்டு மீன்பிடிப்பு:

நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும்.

ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

VI. காரணம் கூறுக.

Question 1.

வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.

விடை:

மக்கள் தொகையில் விவசாயம் 50% பங்கினையும், நாட்டு வருமானத்தில் 25% பங்கினையும் கொண்டுள்ளதால் வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.

Question 2.

மழைநீர் சேமிப்பு அவசியம்.

விடை:

இந்தியா அயனமண்டல பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளதால் மழை ஒழுங்கற்று, சீராக கிடைப்பதில்லை. எனவே கிடைக்கும் நீரை சேமிப்பது அவசியம்.

VII. வேறுபடுத்துக.

Question 1.

ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்.

விடை:

Question 2.

வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்.

விடை::

Question 3.

கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு.

விடை:

Question 4.

வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

விடை:

VIII. பத்தியளவில் விடையளி.

Question 1.

இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

விடை:

Question 2.

‌பல்நோக்குத்‌ ‌திட்டம்‌ ‌என்றால்‌ ‌என்ன?‌ ‌ஏதேனும்‌ ‌ இரண்டு‌ ‌இந்திய‌ ‌பல்நோக்கு‌ ‌திட்டங்கள்‌ ‌பற்றி‌ ‌எழுதுக.‌

விடை:

‌பல்நோக்குத்‌ ‌திட்டம்:‌ ‌

இது‌ ‌ஒரு‌ ‌அறிவியல்‌ ‌ முறையிலான‌ ‌நீர்வள‌ ‌மேலாண்மை‌ ‌திட்டமாகும்.‌

ஆற்றின்‌ ‌ குறுக்கே‌ ‌பல்வேறு‌ ‌நோக்கங்களுக்காக‌ ‌அணைகளைக்‌ கட்டுவதால்‌ ‌இவை‌ ‌பல்நோக்கு‌ ‌ஆற்றுப்பள்ளத்தாக்குத்‌ ‌திட்டங்கள்‌ ‌என்று‌ ‌அழைக்கப்படுகிறது.‌

 ‌நீர்ப்பாசனம்,‌ ‌நீர்மின்‌ ‌உற்பத்தி,‌ ‌குடிநீர்‌ ‌மற்றும்‌ ‌தொழிற்சாலைக்கு‌ ‌நீர்‌ ‌வழங்குதல்,‌ ‌வெள்ளத்தடுப்பு,‌ ‌மீன்வள‌ ‌மேம்பாடு,‌ ‌நீர்‌ ‌வழிப்‌ ‌போக்குவரத்து‌ ‌போன்றவை‌ ‌இதன்‌ ‌பல்வேறு‌ ‌நோக்கங்களாகும்.‌

நீர்‌ ‌மின்‌ ‌சக்தி‌ ‌மற்றும்‌ ‌ நீர்ப்பாசனம்‌ ‌ஆகியவை‌ ‌பெரும்பாலான‌ ‌பல்நோக்கு‌‌ ஆற்றுப்‌ ‌பள்ளத்தாக்குத்‌ ‌திட்டத்தின்‌ ‌முக்கிய‌ ‌நோக்கங்களாகும்.‌ ‌

பல்நோக்குத்‌ ‌திட்டத்தின்‌ ‌பெயர்:‌

Question 3.

தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க .

விடை:

தீவிர வேளாண்மையின் பண்புகள் :

தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அறிமுகப்படுத்துவதாகும்.

சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் மற்றும் இரசாயான உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.

தோட்ட வேளாண்மையின் பண்புகள் :

தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.

இவை மலைச் சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ளது.

கடற்கரைப் பகுதிகளுக்கு அருகாமையில் பயிரிடுதல் இவற்றின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும்.

தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.

Question 4.

நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.

விடை:

உணவுப்பயிர்கள்:

அதிக மக்கள் தொகை காரணமாக இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நெல் :

நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

இது அயனமண்டலப் பயிராகும். 24°C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.

நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகின்றது. விதைத் தூரல் முறை

ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை

நாற்று நடுதல் முறை

கோதுமை :

நெற்பயிருக்கு அடுத்தாற்போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்.

சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.

இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல்மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

……………… இடத்திற்கு இடம் மாறுபடும்.

அ) காலநிலை

ஆ) வானிலை

இ) மண்

ஈ) எதுவுமில்லை

விடை:

இ மண்

Question 2.

மண்துகள்கள் ……………… வகைப்படும்.

அ) 4

ஆ) 3

இ) 5

ஈ) 7

விடை:

ஆ) 3

Question 3.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ……………… ஆண்டு தொடங்கப்பட்டது.

அ) 1935

ஆ) 1953

இ) 1967

ஈ) 1992

விடை:

ஆ) 1953

Question 4.

மண் ……………. பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அ) 8

ஆ) 7

இ) 3

ஈ) 2

விடை:

அ) 8

Question 5.

வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை ……….

அ) வேளாண்மை

ஆ) நீர்ப்பாசனம்

இ) கால்வாய்

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) நீர்ப்பாசனம்

Question 6.

……………… பாசனம் இந்தியாவின் 2வது முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாகும்.

அ) கால்வாய்

ஆ) கிணற்று

இ) ஏரிப்

ஈ) எதுவுமில்லை

விடை:

அ) கால்வாய்

Question 7.

………………. பாசனம் இரண்டு வகைப்படும்.

அ) கால்வாய்ப்

ஆ) ஏரிப்

இ) கிணற்றுப்

ஈ) சொட்டுநீர்ப்

விடை::

அ) கால்வாய்ப்

Question 8.

சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ……………. நீர் சேமிக்கப்படுகிறது.

அ) 60%

ஆ) 70%

இ) 20%

ஈ) 80%

விடை:

ஆ) 70%

Question 9.

தண்ணீ ர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் …….

அ) ICAR

ஆ) PMKY

இ) IBWL

ஈ) எதுவுமில்லை

விடை:

PMKY

Question 10.

……………… வேளாண்மை வெட்டுதல் (ம) எரித்தல் வேளாண்மை எனப்படுகிறது.

அ) தன்னிறைவு

ஆ) இடப்பெயர்வு

இ) கலப்பு

ஈ) வறண்ட நில

விடை:

ஆ) இடப்பெயர்வு

Question 11.

வேளாண் பருவம் ……………… வகைப்படும்.

அ) 4

ஆ) 7

இ) 3

ஈ) 5

விடை:

இ 3

Question 12.

கம்பு ………………ஐ பூர்வீகமாக கொண்ட பயிர்.

அ) ஆசியா

ஆ) இந்தியா

இ) ஆப்பிரிக்கா

ஈ) யூரேசியா

விடை::

இ ஆப்பிரிக்கா

Question 13.

இந்தியாவின் முக்கியப் பயிர் …………………….

அ) கோதுமை

ஆ) நெல்

இ) சோளம்

ஈ) பார்லி

விடை::

ஆ) நெல்

Question 14.

ஏற்றுமதி நோக்கத்திற்காக பயிரிடப்படுபவை ……………… பயிர்கள் ஆகும்.

அ) உணவு

ஆ) வாணிப

இ) முக்கிய

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) வாணிய

Question 15.

அசாமிகா எனும் தேயிலையின் பிறப்பிடம் ……………. ஆகும்.

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) இத்தாலி

ஈ) இந்தியா

விடை:

ஈ) இந்தியா

Question 16.

கடல் மீன்பிடிப்பில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் ……………… ஆகும்.

அ) அசாம்

ஆ) தமிழ்நாடு

இ) கேரளா

ஈ) கர்நாடகா

விடை:

இ கேரளா

Question 17.

உள்நாட்டு மீன்பிடிப்பில் முதலிடம் ………….

அ) பீகார்

ஆ) குஜராத்

இ) ஆந்திரப் பிரதேசம்

ஈ) எதுவுமில்லை

விடை:

இ ஆந்திரப் பிரதேசம்

Question 18.

காற்று (ம) நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் அளவு பாதிக்கப்படுகிறது ………..

அ) வளமற்ற மண்

ஆ) மண்ண ரிப்பு

இ) பற்றாக்குறை

ஈ) நீர்ப்பாசனம்

விடை::

ஆ) மண்ணரிப்பு

Question 19.

வேளாண்மை ……………… மூலதனம் தேவைப்படும் தொழிலில் ஒன்று.

அ) குறைவு

ஆ) அதிக

இ) நடுநிலைமை

ஈ) எதுமில்லை

விடை:

ஆ) அதிக

Question 20.

உருளைக்கிழங்கால் ஏற்படும் புரட்சி ………………. புரட்சி.

அ) மஞ்சள்

ஆ) நீலம்

இ) பழுப்பு

ஈ) வட்ட

விடை:

ஈ) வட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

வளங்களில் …………………….. மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

விடை:

மண்வளம்

Question 2.

இந்தியா …………….. மண் வகையைக் கொண்டது.

விடை:

8

Question 3.

……………………. என்பது தண்ணீ ர் பயன்பாட்டை ஏற்படுத்தப்பட்ட திட்டம்.

விடை:

PMKY

Question 4.

இந்திய உணவுப்பயிர்கள் ………… வகைப்படும்.

விடை:

ஆறு

Question 5.

நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப் பயிர் …………… ஆகும்.

விடை:

சோளம்

Question 6.

………….. நம் நாட்டின் முக்கிய தானியப்பயிர் ஆகும்.

விடை:

பார்லி

Question 7.

இந்தியா ……………………. உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

விடை:

கரும்பு

Question 8.

பருத்தி உற்பத்தியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ……….. இரண்டாவது இடத்திலுள்ளது.

விடை:

சீனா

Question 9.

காபி …………….. சூழலில் நன்கு வளரும்.

விடை:

நிழலில்

Question 10.

உலக காபி உற்பத்தியில் இந்தியா ……………. இடத்தை வகிக்கிறது.

விடை:

ஏழாவது

Question 11.

இந்தியா மொத்த கால்நடைகளில் மாடுகள் ……………… ஆகும்.

விடை:

37.3%

Question 12.

பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு ………… உலக புகழ்பெற்றது.

விடை::

இந்தியா

Question 13.

இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு ……………. தொடங்கியது.

விடை:

1919

Question 14.

………………… நறுமணப் பொருள் உற்பத்தியில் முதன்மையான மாநிலம்.

விடை:

கேரளா

Question 15.

………………… ஆற்றுப் பள்ளத்தாக்கு என்பது நீர்வள மேலாண்மையான திட்டமாகும்.

விடை:

பல்நோக்கு

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

Question 1.

கூற்று : கரிசல் மண் தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளிலிருந்து உருவாகிறது.

காரணம் : பருத்தி, தினை கரிசல்மண்ணில் நன்கு வளரும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி

விடை:

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Question 2.

கூற்று : சொட்டு நீர்ப் பாசனத்தில் நீரானது குழாயிலுள்ள நுண்துளைகள் வழியே பயிருக்கு பாய்ச்சப்படுகிறது.

காரணம் : இப்பாசனம் மூலம் 70% நீர் வீணாகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி

விடை:

இ கூற்று சரி, காரணம் தவறு

IV. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

அ) வண்ட ல் மண்

ஆ) செம்மண்

இ) கரிசல் மண்

ஈ) பாசனம்

விடை:

ஈ) பாசனம்

Question 2.

அ) மாடு

ஆ) வெள்ளாடு

இ) எருமை

ஈ) மீன்

விடை:

ஈ) மீன்

V. பொருத்துக.

விடை:

VI. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.

நீர்ப்பாசனம் குறிப்பு வரைக.

விடை:

வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால், வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

Question 2.

வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம் குறிப்பு வரைக.

விடை:

இவ்வகை நீர்ப்பாசனத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது. 4 மீட்டர் உயரம் வரையுள்ள பயிர் வகைகளுக்கும் இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம்.

எ.கா. கரும்பு மற்றும் சோளப் பயிர்கள்

Question 3.

தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

விடை:

தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது.

இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை , மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படுகிறது.

Question 4.

பாசனத்தின் மூலங்கள் யாவை?

விடை:

கால்வாய் பாசனம்

கிணற்றுப் பாசனம்

ஏரிப் பாசனம்

Question 5.

தோட்டக்கலை பயிர்கள் குறிப்பு வரைக.

விடை:

தோட்டக்கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிர்களைக் குறிக்கிறது.

பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

Question 6.

கலப்பு வேளாண்மை என்பது யாது?

விடை:

கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

VII. காரணம் கூறுக.

Question 1.

சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீரை சேமிக்கலாம்.

விடை:

நீர் சொட்டு சொட்டாக விடப்படுவால் நீர் சேமிக்கப்படுகிறது.

இந்நீர்ப்பாசனத்தின் மூலம் 70% நீர் சேர்க்கப்படுகிறது.

Question 2.

சணல் ஒரு வெப்பமண்டலப் பயிராகும்.

விடை:

வண்டல் மண்ணில் சணல் வளர்வதால் சணல் ஒரு வெப்பமண்டல இழைப் பயிராகும்.

VIII. வேறுபடுத்துக.

Question 1.

செம்மண் மற்றும் சரளை மண்

விடை:

Question 2.

கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம்

விடை:

IX. பத்தியளவில் விடையளி.

Question 1.

கிணற்றுப் பாசனம் பற்றி குறிப்பு வரைக.

விடை:

கிணற்றுப் பாசனம்:

கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு கொண்டுவருதல் ஆகும்.

இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது.

மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது.

கிணறுகள் இரண்டு வகைப்படும். அவை,

திறந்தவெளிக் கிணறுகள்

ஆழ்துளைக் கிணறுகள்.

1 . திறந்த வெளிக் கிணறுகள்:

நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகிறது.

இப்பாசனம் கங்கை சமவெளி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா , காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

2. ஆழ்த்துளைக் கிணறுகள்:

ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.

Question 2.

இந்தியாவின் முக்கிய பயிர்கள் மற்றும் அதில் வாணிபப் பயிர்கள் பற்றி விவரி.

விடை:

இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.

உணவு பயிர்கள் – நெல், கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு வகைகள்.

வாணிபப் பயிர்கள் – கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்.

தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்

தோட்டக்கலைப் பயிர்கள் – பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறிகள்

2. வாணிபப்பயிர்கள் :

வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிபப்பயிர்கள் என அழைக்கிறோம்.

வாணிபப்பயிர்கள் கரும்பு, புகையிலை, இழைப்பயிர்கள் (பருத்தி மற்றும் சணல்) மற்றும் எண்ணெய் வித்துக்களை உள்ளடக்கியதாகும்.

கரும்பு:

இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும்.

இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது.

இந்தியாவில் உத்தரப்பிரதேசம் கரும்பின் முதன்மை உற்பத்தியாளராகும்.

அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும்.

பருத்தி:

இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருள்களை அளிக்கிறது.

பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

சணல்:

சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும்.

சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்காள மாநிலம் முதலிடம் வகிக்கிறது.

பீகார், அசாம் மற்றும் மேகாலயா சணல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.

எண்ணெய் வித்துக்கள்:

இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்தை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும்.

நிலக்கடலை, கடுகு, எள், ஆளி விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள் போன்றவை முக்கியமான எண்ணெய் வித்துக்கள் ஆகும்.