Ads

தமிழ்நாடு – மானுடப் புவியியல் -10th Std Social Science- Book Back Question And Answer

தமிழ்நாடு – மானுடப் புவியியல் -10th Std Social Science- Book Back Question And Answer 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா …………..

அ) காவிரி டெல்டா

ஆ) மகாந்தி டெல்டா

இ) கோதாவரி டெல்டா

ஈ) கிருஷ்ணா டெல்டா

விடை:

அ) காவிரி டெல்டா

Question 2.

தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ……………….

அ) பருப்பு வகைகள்

ஆ) சிறுதானியங்கள்

இ) எண்ணெய் வித்துக்கள்

ஈ) நெல்

விடை:

ஆ) சிறுதானியங்கள்

Question 3.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………….

அ) மேட்டூர்

ஆ) பாபநாசம்

இ) சாத்தனூர்

ஈ) துங்கபத்ரா

விடை:

அ) மேட்டூர்

Question 4.

தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ………………

அ) 3 மற்றும் 15

ஆ) 4 மற்றும் 16

இ) 3 மற்றும் 16

ஈ) 4 மற்றும் 15

விடை:

அ) 3 மற்றும் 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ……………….. சதவீதத்தை வகிக்கிறது.

விடை:

21

Question 2.

சாத்தனூர் அணை …………….. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

விடை:

தென்பெண்னை

Question 3.

மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ………. ஆகும்.

விடை:

சென்னை பன்னாட்டு விமான நிலையம்

Question 4.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ………………. அழைக்கப்படுகிறது.

விடை:

வணிக சமநிலை

III. பொருத்துக .

விடை:

IV. சரியான கூற்றினை கண்டுபிடி.

Question 1.

கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விடை:

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

Question 2.

கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.

காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விடை:

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.

தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.

விடை:

Question 2.

கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படுகிறது?

விடை:

பருத்தி நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன.

கோயம்புத்தூர் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.

பருத்தி கோயம்புத்தூர் பீடபூமியில் பயிரிடப்பிடுகிறது. எனவே, கோயம்புத்தூர் ‘தமிழ்நாட்டின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 3.

தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.

விடை:

மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி அணை, கிருஷ்ணகிரி அணை, முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை

Question 4.

பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன ?

விடை:

சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.

மெட்ரோ இரயில்வே அமைப்பு, இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

Question 5.

தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை பட்டியலிடுக.

விடை:

விமானநிலையங்கள் : கோயம்புத்தூர், மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமானநிலையங்கள் ஆகும். தூத்துக்குடி, மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமானநிலையங்கள் ஆகும்.

துறைமுகங்கள்: சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.

கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் பிடித்தல்.

விடை:

Question 2.

உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.

விடை:

Question 3.

மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.

விடை:

VII. கீழ்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.

விவசாயிகள் இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.

விடை:

தற்போதைய மாறிவரும் சூழலில் மக்கள் பெரும்பாலும் கரிம வேளாண் பொருட்களை விரும்புகிறார்கள்.

வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பயிர் தூண்டுதல்கள் போன்ற கனிம விவசாயத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக விவசாயிகள் பூமியின் உரங்களைப் பயன்படுத்துகின்றன.

Question 2.

கிராமங்களை விட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.

விடை:

வேளாண்மை, தொழிற்துறை வளர்ச்சி போன்றவை மக்கள் தொகை அதிகளவில் இருப்பதற்கான காரணங்கள் ஆகும்.

எ.கா. மதுரை, சென்னை , கோயம்புத்தூர்

Question 3.

தமிழ்நாட்டின் ‘நெசவாலை தலைநகர்’ என கரூர் அழைக்கப்படுகிறது.

விடை:

ஜவுளி ஆலைகள் கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளன.

ஜவுளி மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கை கொடுத்துள்ளன.

எனவே, கரூர் ‘நெசவாலைத் தலைநகரம்’ எனப்படுகிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.

தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.

விடை:

தோட்டப்பயிர்கள் :

தேயிலை, காப்பி, இரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.

தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றம் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.

நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காப்பி பயிரிடப்படுகின்றது.

நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சரிவுகளில் காப்பி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.

திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளில் காப்பி பயிரிடப்படுகின்றது.

காப்பி உற்பத்தியில் கர்நாடக மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.

இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சிகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.

கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.

Question 2.

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.

விடை:

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்:

மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்:

இந்தியப் பரப்பளவில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ளது தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் உள்ள நீர்வள ஆதாரங்கள்:

பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண் நீர்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 3.

தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.

விடை:

Question 4.

தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் பற்றி அதற்கான காரணங்களை எழுதுக.

விடை:

ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.

மக்கள் தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர, ஆய்வுகள் மக்கட்தொகையில் என அழைக்கப்படுகின்றது.

அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள்:

கோவை, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும்.

இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும்.

Question 5.

தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.

விடை:

சாலைகளின் வகைகள்:

மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுங்சாலைகள் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

தனியார் துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இரயில்வே போக்குவரத்து :

தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.

தற்போது தெற்கு இரயில்வே வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்ப பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.

மெட்ரோ இரயில்வே அமைப்பு மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன், இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து :

தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

சென்னை சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்தாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையாக உள்ளது.

கோயம்புத்தூர் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமான நிலையங்களின் ஆகும்.

துாத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமாநிலையங்கள் ஆகும்.

நீர்வழிப் போக்குவரத்து:

சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.

நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

Question 6.

சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.

விடை:

சாலை சமிக்கைகளை அறிதல்

நில், கவனி, செல்

ஒரு வாகனம் நெருங்குகிறதா என கவனியுங்கள்.

சாலையில் விரைந்து செல்ல வேண்டாம்.

பாதசாரிகளுக்கான பாதையில் சாலையைக் கடக்க வேண்டும்.

வாகனம் ஓட்டும் போது கைகளை நீட்ட வேண்டாம்.

ஒரு போதும் வளைவுகளில் சாலையைக் கடக்காதீர் (மற்றும்) நகரும் வாகனத்தால் பாதுகாப்பாக இருங்கள்.

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.

கோயம்புத்தூர் மாவட்டம் ……………. உற்பத்தியில் முதல்நிலை வகிக்கிறது.

அ) உளுந்து

ஆ) கொண்டக்கடலை

இ) பச்சப்பயிறு

ஈ) கொள்ளு

விடை::

ஆ) கொண்டக்கடலை

Question 2.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ……………. பயிரிடப்படுகிறது.

அ) உளுந்து

ஆ) கொண்டக்கடலை

இ) பச்சைப்பயிறு

ஈ) கொள்ளு

விடை:

ஆ) கொண்டக்கடலை

Question 3.

மலையடுக்குப் பகுதியில் ……………. அணை கட்டப்பட்டுள்ளது.

அ) பவானி

ஆ) மேட்டூர்

இ) அமராவதி

ஈ) சாத்தனூர்

விடை:

ஆ) மேட்டூர்

Question 4.

கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து …………………. தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

அ) 17 கி.மீ

ஆ) 7 கி.மீ

இ) 12 கி.மீ

ஈ) 15 கி.மீ

விடை:

ஆ) 7 கி.மீ

Question 5.

…………………. நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.

அ) மதுரை

ஆ) திருநெல்வேலி

இ) தூத்துக்குடி

ஈ) எதுவுமில்லை

விடை:

ஆ) திருநெல்வேலி

Question 6.

வைகை அணை ………………. நாள் திறக்கப்பட்டது.

அ) 1995, ஜனவரி 22ஆம்

ஆ) 1959, ஜீன் 12ஆம்

இ) 1959, ஜனவரி 21ஆம்

ஈ) 1969, ஜனவரி 21ஆம்

விடை:

இ) 1959, ஜனவரி 21ஆம்

Question 7.

இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு ……………. உற்பத்தியையும் அளிக்கிறது.

அ) 40%

ஆ) 60%

இ) 50%

ஈ) 65%

விடை:

ஆ) 60%

Question 8.

……………… உலகளவில் திறன்படைத்த அலைகளில் ஒன்றாகும்.

அ) காகித நிறுவனம்

ஆ) கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம்

இ) தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம்

விடை:

அ) காகித நிறுவனம்

Question 9.

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு ………………. பெரிய மாநிலமாக உள்ளது.

அ) நான்காவது

ஆ) மூன்றாவது

இ) இரண்டாவது

ஈ) ஏழாவது

விடை:

இ இரண்டாவது

Question 10.

……………… மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி பதிவாகியுள்ளது.

அ) நாகப்பட்டினம்

ஆ) நீலகிரி

இ) இராமநாதபுரம்

ஈ) புதுக்கோட்டை

விடை:

ஆ) நீலகிரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

……………… என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் ஆகும்.

விடை:

மானுடப் புவியியல்

Question 2.

அக்ரிகல்சரின் பொருள் ……………….

விடை:

நிலம் மற்றும் வளர்த்தல்

Question 3.

TRRI-ன் விரிவாக்கம் …………….

விடை:

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

Question 4.

கோயம்புத்தூர் பீடபூமியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் ……………… பயிரிடப்படுகின்ற ன.

விடை:

சோளம்

Question 5.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் …………….. என்றும் அழைக்கப்படுகிறது.

விடை:

ஆவின்

Question 6.

பரப்பலாறு திட்டம் ……………….. அருகே அமைந்துள்ளது.

விடை:

ஓட்டஞ்சத்திரம்

Question 7.

கரூர் ……………… என்றழைக்கப்படுகிறது.

விடை:

தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்

Question 8.

இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் ……………… உற்பத்தி செய்யப்படுகிறது.

விடை:

செயற்கைப் பட்டு துணிகள்

Question 9.

உற்பத்தித் தொழில் என்பது மாநிலப் பொருளாதாரத்தின் ………………. ஒன்றாகும்.

விடை:

துடிப்பான துறைகளில்

Question 10.

தமிழ்நாட்டில் சர்க்க ரைத் தொழிலகம் ஒரு ………………..

விடை:

வேளாண் சார்ந்த தொழிலகமாகும்

III. பொருத்துக 

விடை::

IV. கூற்று வகை வினா.

Question 1.

கூற்று : நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 4வது இடத்தை வகிக்கிறது.

காரணம் : காஞ்சி புரம் பட்டு என்பது அதன் தனித்தன்மை , தரம் (ம) பாரம்பரிய பதிப்பால் உலகறியப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விடை::

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

Question 2.

கூற்று : கைத்தறித் துறையானது மாநிலத்தின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும்.

காரணம் : இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், வருவாயையும் அளிக்கின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விடை::

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.

நீர்ப்பாசனம் வரையறு.

விடை::

மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது.

மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது.

எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும்.

வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

Question 2.

டான் டீ வரையறு.

விடை::

டான் டீ இந்நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும்.

(தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம்) இந்நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4,500 ஹெக்டேர் ஆகும்.

Question 3.

உள்நாட்டு மீன்பிடிப்பு பற்றிக் குறிப்பிடுக.

விடை::

ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல் நடைபெறுகிறது.

சிப்பிகள் மற்றும் இறால்கள் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

கட்டுமரம், டீசல் படகுகள் மற்றும் மீன் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் நடைபெறுகிறது.

Question 4.

தொழிலகங்கள் வரையறு.

விடை::

மூலப்பொருள்களை இயந்திரங்களின் மூலம் உற்பத்திப் பொருள்களாகவோ அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள்களாகவோ மாற்றப்படும் இடமே தொழிலகங்களாகும்.

பருத்தி நெசவாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தோல் தொழிலகம், சிமெண்ட் ஆலை, மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி ஆலை, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் ஆகும்.

Question 5.

புவியியல் குறியீடு வரையறு.

விடை::

புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும்.

இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. கோயம்புத்தூர் – மாவு இரைக்கும் இயந்திரம் கோரப்பட்டு சேலை சில முக்கிய புவியியல் குறியீடுகள்

Question 6.

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் யாவை?

விடை::

டைடல் பூங்கா, அசெண்டாஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மகேந்திரா உலக நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா II மற்றும் டைடல் பூங்கா III, கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா ஆகியனவாகும்.

Question 7.

மக்கட்தொகையியல் – வரையறு.

விடை::

ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.

மக்கள் தொகைப் பண்புகள் பற்றி புள்ளிவிவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என அழைக்கப்படுகிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.

காகித தொழிலகம் மற்றும் சிமெண்ட் தொழிலகம். காகித தொழிலகம்

விடை:::

Question 2.

பவானி சாகர் அணை மற்றும் வைகை அணை.

விடை:::

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.

ஈரோடு தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு எனப்படுகிறது.

விடை::

கைத்தறி, விசைத்தறி மற்றும்) ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு ஏற்றதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

Question 2.

சுற்றுலாத் துறை ஒரு தொழிலகமாக கருதப்படுகிறது.

விடை::

ஏனெனில் இதில் ஏராளமான மக்களுக்கு வெலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.

வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகளை விவரிக்கவும்.

விடை::

நிலத்தோற்றம், காலநிலை, மண் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல் காரணிகளாகும்.

நிலத்தோற்றம்:

தமிழ்நாடானது மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்டவற்றுள் சமவெளிகள் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளதால் சமவெளிப் பகுதிகள் வேளாண் தொழிலுக்கு ஏற்றதாக உள்ளது.

எ.கா. வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி சமவெளி தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும்.

காலநிலை:

தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப மண்டலக் காலநிலையைப் பெறுகிறது.

ஆகையால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது.

எனவே வெப்பமண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.

மண்:

வேளாண்மையின் மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று மண் ஆகும்.

இது பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

நீர்ப்பாசனம்:

மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது.

மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது.

எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும்.

வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

Question 2.

தமிழ்நாட்டின் கனிம வளங்களை விவரிக்க.

விடை::

வெர்மிகுலைட், மேக்னடைட், ரூடுனைட், ரூட்டைல், செம்மணிக்கல், மாலிப்படினம் மற்றும் இல்மனைட் ஆகிய வளங்களில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.

பழுப்பு நிலக்கரி 55% வெர்மிகுலைட் 75%, டுனைட் 59%, செம்மணிக்கல் 59%, மாலிப்டீனம் 52% மற்றும் டைட்டானியம் 30% தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.

மாநிலத்தில் காணப்படும் முக்கியமான தாதுக்கள் பின்வருமாறு: நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது.

இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன.

காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன.

சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி, உதகமண்டலம், பழனிமலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன.

திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.

கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது.