இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் -10th Std Social Science- Book Back Question And Answer
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு …………………
அ) வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
விடை:
ஆ) மக்களியல்
Question 2.
……………. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) இரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
விடை:
ஆ) சாலை
Question 3.
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….
அ) 5846 கி.மீ
ஆ) 5847 கி.மீ
இ) 5849 கி.மீ
ஈ) 5800 கி.மீ
விடை:
அ) 5846 கி.மீ
Question 4.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
விடை:
ஈ) ஹைதராபாத்
Question 5.
எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து …………………
அ) சாலைப்போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து
விடை:
இ வான்வழிப் போக்குவரத்து
Question 6.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
இ) வாயுதூத்
ஈ) பவன்ஹான்ஸ்
விடை:
ஈ) பவன்ஹான்ஸ்
Question 7.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ………………………
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
விடை:
ஈ) பெட்ரோலியம்
II. பொருத்துக.
விடை::
III. குறுகிய விடையளி.
Question 1.
இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
விடை::
இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும்.
இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்) மற்றும் சர்வதேச இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே) என இருவகைப்படும்.
Question 2.
இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:::
இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது.
இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.
மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கும் தயாரிக்கப்பட்ட தொழிலக பொருள்களைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் இரயில்வேயின் பணி மதிப்பிட முடியாத ஒன்று ஆகும்.
Question 3.
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
விடை::
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது
இவை நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.
Question 4.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்களைக் குறிப்பிடுக.
விடை::
1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 1:
இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ. நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது. கங்கை -பாகிரதி ஹீக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
2. தேசிய நிர்வழிப்போக்குவரத்து எண். 2:
இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது.
Question 5.
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 3:
விடை::
இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது.
Question 6.
தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை::
தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம்.
கவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
தனிமனித தகவல் தொடர்பு.
பொதுத்தகவல் தொடர்பு.
Question 7.
பன்னாட்டு வணிகம் – வரையறு.
விடை::
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.
Question 8.
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.
விடை::
சாலை வழி உலகளாவிய போக்குவரத்து முறையாகும்.
சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது குறுகிய, மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பொருத்தமானதாக உள்ளது.
சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும்பொழுது மலிவானதாகும்.
சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிற்கிடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்த முடியும்.
இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.
IV. வேறுபடுத்துக.
Question 1.
மக்களடர்த்தி மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி.
விடை::
Question 2.
தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு.
விடை::
Question 3.
அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்.
விடை::
Question 4.
சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து.
விடை::
Question 5.
நீர்வழிப்போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து.
விடை::
Question 6.
உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
விடை::
V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
Question 1.
நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை.
விடை::
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
இந்திய நகரமயமாக்கம்:
நகர்புற மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது.
நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:
நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்குகிறது.
குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.
Question 2.
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.
விடை::
செயற்கைக் கோளானது தொடர்ச்சியாக மிகப் பெரும் பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது.
செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு, எல்லைப்பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1929 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத் தொடர்பு பரிமாற்றத்தில் செய்ற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் செய்றைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)
1983-ல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.
இன்சாட் வரிசை செய்றைக்கோள், கைபேசி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக் காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும், ராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1. ஹேம்சாட், எஜீசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோளாகும்.
ஆகஸ்ட் 30, 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.
Question 3.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
விடை::
சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.
தேசிய நெடுங்சாலைகள்:
தேசிய நெஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கியமான அமைப்பாகும்.
நாட்டின் எல்லைகளையும், மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH44 ஆகும்.
குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47A ஆகும்.
மாநில நெடுஞ்சாலைகள்:
மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை, மாநில தலைநகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.
இந்தச் சாலைகள் மாநில பொதுப்பணித் துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
மாவட்டச் சாலைகள்:
மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 2016-இன்படி இந்தியாவில் மாவட்டச் சாலைகளின் நீளம் 5,61,940 கி.மீ. (16.81%) ஆகும்.
ஊரகப் பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்)
இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. இவைகள் கிராம பஞ்சயாத்துகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.
எல்லைப்புறச் சாலைகள்:
எல்லைப் புறச் சாலைகள் நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலை வகைகளாகும்.
இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வமைப்பு 1960-இல் நிறுவப்பட்டது. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
தங்க நாற்கரச் சாலைகள்:
இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது.
விரைவுச் சாலைகள்:
விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைப் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
முக்கியமான சில விரைவுச் சாலைகள்
மும்பை – பூனா விரைவுச் சாலை
கொல்கத்தா – டம்டம் விமான நிலைய விரைவுச் சாலை
துர்காப்பூர் – கொல்கத்தா விரைவுச்சாலை
புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை
பன்னாட்டு நெடுஞ்சாலைகள்:
இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாலைகள் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
இச்சாலைகள் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ……………..ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
அ) 1972
ஆ) 1982
இ) 1872
ஈ) 1782
விடை::
இ) 1872
Question 2.
ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்வது …………..
அ) இடப்பெயர்வு
ஆ) நகரமயமாக்கல்
இ) உலகமயமாக்கல்
ஈ) மக்கள் தொகை
விடை::
அ) இடப்பெயர்வு
Question 3.
……………… மக்கள் தொகையில் 1000 ஆண்க ளுக்குள்ள பெண்களைக் குறிக்கும்.
அ) எழுத்தறிவு
ஆ) கட்டமைப்பு
இ) வயதுக்கலவை
ஈ) பாலின விகிதம்
விடை:::
ஈ) பாலின விகிதம்
Question 4.
கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாற்றமடைவதை ………………. என்கிறோம்.
அ) போக்குவரத்து
ஆ) உலகமயமாக்கல்
இ) நகரமயமாக்கல்
ஈ) தொழில்மயமாக்கல்
விடை::
இ நகரமயமாக்கல்
Question 5.
நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ………………. இடத்திலுள்ளது.
அ) மூன்றாவது
ஆ) இரண்டாவது
இ) நான்காவது
ஈ) ஏழாவது
விடை::
ஆ) இரண்டாவது
Question 6.
போக்குவரத்து …………… வகைப்படும்.
அ) 7
ஆ) 8
இ) 4
ஈ) 3
விடை::
ஈ 3
Question 7.
இந்தியாவின் குறைந்த நீளமுடைய நெடுஞ்சாலை ………………………. ஆகும்.
அ) NH44
ஆ) NH47A
இ) NH34 B
ஈ) NH4
விடை::
இ NH47A
Question 8.
இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை ………………. ஆகும்.
அ) NH34
ஆ) NH74
இ) NH44
ஈ) NH47A
விடை::
இ) NH44
Question 9.
கிராமங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுவது …………..
அ) மாவட்ட சாலை
ஆ) கிராம சாலை
இ) நெடுஞ்சாலை
ஈ) எல்லைப்புற சாலை
விடை::
ஆ) கிராம சாலை
Question 10.
மாவட்ட சாலை …………… துறையால் பராமரிக்கப்படுகிறது.
அ) மாநில
ஆ) மாவட்ட
இ) கிராமம்
ஈ) எதுவுமில்லை
விடை::
அ) மாநில
Question 11.
தங்க நாற்கர சாலையின் நீளம் …………….. ஆகும்.
அ) 5432 கி.மீ
ஆ) 5846 கி.மீ
இ) 3216 கி.மீ
ஈ) 3015 கி.மீ
விடை::
5846 கி.மீ
Question 12.
வடக்கு இரயில்வேயின் தலைமையகம் ……………… ஆகும்.
அ) மும்பை
ஆ) ஜபல்பூர்
இ) சென்னை
ஈ) புதுடெல்லி
விடை::
ஈ) புதுடெல்லி
Question 13.
மத்திய இரயில்வேயின் தலைமையகம் …………….. ஆகும்.
அ) சென்னை
ஆ) ஜபல்பூர்
இ) மும்பை
ஈ) டெல்லி
விடை::
இ மும்பை
Question 14.
………………. போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக உள்ளது.
அ) சாலை
ஆ) இரயில்வே
இ) நீர்வழி
ஈ) எதுவுமில்லை
விடை::
ஆ) இரயில்வே
Question 15.
……………. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .
அ) பிலாஸ்பூர்
ஆ) ஹசிப்பூர்
இ) கௌஹாத்தி
ஈ) மேகாலயா
விடை::
ஈ) மேகாலயா
Question 16.
இந்திய இரயில் சேவை முதன்முதலில் ……………… தொடங்கப்பட்டது.
அ) குஜராத்
ஆ) ஜம்மு
இ) லடாக்
ஈ) கொல்கத்தா
விடை::
ஈ) கொல்கத்தா
Question 17.
நீர்வழிப் போக்குவரத்து …………… வகைப்படும்.
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 5
விடை::
இ 2
Question 18.
இந்திய விமான நிலைய பொறுப்பாணையம் …………… ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1985
ஆ) 1995
இ) 1885
ஈ) 1895
விடை::
ஆ) 1995
Question 19.
இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் ……………… வணிகம் ஆகும்.
அ) இருதரப்பு
ஆ) பன்னாட்டு
இ) சர்வதேச
ஈ) எதுவுமில்லை
விடை::
அ) இருதரப்பு
Question 20.
உள்நாட்டு வணிகம், ………………. வணிகம் எனப்படுகிறது.
அ) இருதரப்பு
ஆ) பன்னாட்டு
இ) சர்வதேச
ஈ) உள்ளூர்
விடை::
ஈ) உள்ளூர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ……………. ஆகும்.
விடை::
இந்தியா
Question 2.
……………………… என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
விடை::
பிறப்பு விகிதம்
Question 3.
……………. என்பது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பது.
விடை::
இறப்பு விகிதம்
Question 4.
மக்கள் தொகை மாற்றங்கள் பற்றி படிப்பது ……………… ஆய்வின் முக்கிய அம்சமாகும்.
விடை::
மக்கள்தொகை
Question 5.
போக்குவரத்து அமைப்பு நாட்டின் ………………… கருதப்படுகிறது.
விடை::
உயிர்நாடியாக
Question 6.
……………………… மலிவான போக்குவரத்து ஆகும்.
விடை:::
சாலை வழி போக்குவரத்து
Question 7.
சாஹி (ராயல்) சாலை ……….. என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விடை::
கிராண்ட் ட்ரங்க்சாலை
Question 8.
………….. அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிவேக இரயில்வண்டி ஆகும்.
விடை::
காத்திமன்
Question 9.
…………….. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .
விடை::
மேகாலயா
Question 10.
………………. இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்தில் முக்கியமான ஒன்று.
விடை::
நீர்வழிப் போக்குவரத்து
Question 11.
………………. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:::
கடல்வழி போக்குவரத்து
Question 12.
இந்தியாவில் ……………. முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன.
விடை::
நான்கு
Question 13.
……………….. பயணசெலவு மிகுந்த போக்குவரத்து ஆகும்.
விடை::
வான்வழிப் போக்குவரத்து
Question 14.
இந்திய அரசாங்கம் ………….. என்ற விமான சேவையை வழங்குகிறது.
விடை::
ஏர் இந்தியா
Question 15.
………….. தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள்.
விடை::
இன்சாட் 1B
Question 16.
…………… என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணி ஆகும்.
விடை::
வணிகம்
Question 17.
இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு ………. என அழைக்கப்படுகிறது.
விடை::
தூர்தர்ஷன்
Question 18.
தொலைப்பேசி ………….. வளர்ச்சிக்கு உதவிக்கரமாக உள்ளது.
விடை::
வணிக
Question 19.
வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள ………….. முறை பயன்படுகிறது.
விடை::
ISD
Question 20.
அகில இந்திய வானொலி ……………. எனவும் அழைக்கப்படுகிறது.
விடை::
ஆகாச வாணி
III. பொருத்துக.
விடை::
IV. குறுகிய விடையளி.
Question 1.
மக்கள் தொகை வரையறு.
விடை::
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்றழைக்கப்படுகிறது.
Question 2.
மக்கள் தொகை மாற்றம் – வரையறு.
விடை::
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ மக்கள் தொகை மாற்றம் என்பதாகும்.
Question 3.
பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் – வரையறு.
விடை::
பிறப்பு விகிதம் : பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும்.
இறப்பு விகிதம்:
இறப்பு விகிதம் எனப்படுவது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
Question 4.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை::
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
Question 5.
இந்திய இரயில்வே துறை இரும்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
விடை::
இந்திய இரயில்வே துறை இரும்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்காலம். அவை,
அகலப்பாதை (1,676 மீ அகலம்]
மீட்டர் பாதை [1.00மீ அகலம்]
குறுகிய பாதை [0.762 மீ]
குறுகிய தூக்குப் பாதை [0.610 அகலம்]
Question 6.
செய்தித்தாள் ஊடகம் – வரையறு.
விடை::
செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.
இந்தியாவில் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன
Question 7.
இந்தியாவில் முக்கிய கப்பல் தளங்கள் யாவை?
விடை::
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை – கொல்கத்தா
மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை – மும்பை
கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி
V. வேறுபடுத்துக.
Question 1.
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள்.
விடை:::
VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
Question 1.
குறிப்பு வரைக. 1. மக்கள் தொகைக் கலவை 2. வயதுக் கலவை 3. பாலின விகிதம் 4. எழுத்தறிவு விகிதம் 5. மக்கள் தொகை
விடை:::
1. மக்கள் தொகைக் கலவை:
மக்கள் தொகைக் கலவை என்பது பல்வேறு பண்புகளான வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது.
மக்கள் தொகை கலவை பற்றி கற்பது சமூக – பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் அமைப்பை அறிய உதவுகிறது.
வயதுக் கலவை:
வயதுக் கலவை என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை குறிக்கிறது.
நாட்டின் மக்கள் தொகை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுறிது.
பாலின விகிதம் :
பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.
எழுத்தறிவு விகிதம்:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7வயதிற்கு அதிகமான ஒருவர் ஏதாவதொரு மொழியைப் புரிந்துகொண்டு எழுதப் படிக்க தெரிந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்.
மக்கள் தொகை இயக்கவியல்:
மக்கள் தொகை இயக்கவியல் என்பது மக்கள் தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் தொடர்பான காரணிகள் குறித்து கற்கும் ஒரு துறையாகும்.
Question 2.
வணிகம் வரையறு. வணிகத்தின் வகைகளை விவரி.
விடை::
வணிகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
வணிகம் என்பது பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குவதும் விற்பதும் அல்லது பரிமாற்றம் செய்து கொள்ளும் செயலாகும்.
வணிக வகைகள் :
பொதுவாக வணிகம் இருவகைப்படும். அவை
உள்நாட்டு வணிகம்
பன்னாட்டு வணிகம்
1. உள்நாட்டு வணிகம்:
ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் எனவும் உள்ளூர் வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
(எ.கா.) உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. (குறிப்பாக சாலை மற்றும் இரயில் வழி).
பன்னாட்டு வணிகம்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
எ.கா. பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
இருத்தரப்பு மற்றும் பலதரப்பு வணிகம்:
வணிகம் இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் அவை இருத்தரப்பு வணிகம் என்றும், வணிகம் இரண்டிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெற்றால் அது பல்தரப்பு வணிகம் என்றும் அழைக்கப்படுகிறது.