தேசியம்: காந்திய காலகட்டம் -10th Std Social Science- Book Back Question And Answer
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
அ) மோதிலால் நேரு
ஆ) சைஃபுதீன் கிச்லு
இ) முகம்மது அலி
ஈ) ராஜ் குமார் சுக்லா
விடை::
ஆ) சைஃபுதீன் கிச்லு
Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) கல்கத்தா
ஈ) நாக்பூர்
விடை:
ஈ) நாக்பூர்
Question 3.
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
அ) 1930 ஜனவரி 26
ஆ) 1929 டிசம்பர் 26
இ) 1946 ஜூன் 16
ஈ) 1947 ஜனவரி 15
விடை::
அ) 1930 ஜனவரி 26
Question 4.
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ) 1858
ஆ) 1911
இ) 1865
ஈ) 1936
விடை:
இ 1865
Question 5.
1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ) கோவில் நுழைவு நாள்
ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
இ) நேரடி நடவடிக்கை நாள்
ஈ) சுதந்திரப் பெருநாள்
விடை:
அ) கோவில் நுழைவு நாள்
Question 6.
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ) 1858ஆம் ஆண்டு சட்டம்
ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909
இ) இந்திய அரசுச் சட்டம், 1919
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
விடை:
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
காந்தியடிகளின் அரசியல் குரு ……………… ஆவார்.
விடை:
கோபால கிருஷ்ண கோகலே
Question 2.
கிலாபத் இயக்கத்துக்கு ……………… தலைமை ஏற்றனர்.
விடை:
அலி சகோதரர்கள்
Question 3.
1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ………………. அறிமுகம் செய்தது.
விடை:
இரட்டை ஆட்சி முறையை
Question 4.
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ………………
விடை:
கான் அப்துல் கஃபார்கான்
Question 5.
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ……………..ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
விடை:
வகுப்புவாரி ஒதுக்கீடு
Question 6.
…………… என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.
விடை:
உஷா மேத்தா
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Question 1.
i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.
iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.
அ) (i) மற்றும் (ii) சரியானது
ஆ) (ii) மற்றும் (iii) சரியானது
இ) (iv) சரியானது
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது
விடை:
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது
Question 2.
கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.
காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுகான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
இ கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
Question 3.
கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
IV. பொருத்துக.
விடை:
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
Question 1.
ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
விடை:
அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைதார்.
ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.
அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிக்சூட்டில் கொல்லப்பட்டனர்.
Question 2.
கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தபோது இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது.
இந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் ஆதரவளித்தார்.
Question 3.
ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?
விடை:
1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் தூண்டுதலில் வன்முறையாக மாறியது.
இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.
Question 4.
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
விடை:
1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.
Question 5.
முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
விடை:
டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
Question 6.
பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
விடை:
பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
லாலா லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை
அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
Question 7.
பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
விடை:
தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.
VI. விரிவாக விடையளிக்கவும்.
Question 1.
காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
விடை:
ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை:
அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார்.
உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.
அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.
ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கிலாபத் இயக்கம் :
1918இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.
இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
இந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் ஆதரவளித்தார்.
இந்த இயக்கத்தை இந்து முஸ்லீம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.
1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றார்.
அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து முஸ்லீம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்.
ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்டு முதல் நாள் தொடங்கியது.
வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம்:
1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
இந்த இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின.
குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின.
வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணத்தை புறக்கணிப்பது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
தாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புக்காக தங்களை காவல்நிலையத்துக்குள் அடைத்துக் கொண்டனர்.
ஆனால் ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
காந்தியடிகள் உடனடியாக இந்த இயக்கத்தை திரும்பப்பெற்றார்.
சைமன் குழு புறக்கணிப்பு:
1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்காா இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
இது ‘சைமன் குழு’ என்றே அழைக்கப்பட்டது.
இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.
Question 2.
காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
விடை:
டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
உப்பு சத்தியாகிரகம்:
1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அவை கீழ்க்கண்டவையாகும்:
இராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.
முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
உப்பு வரியை ரத்துசெய்வது.
வட்டமேசை மாநாடு:
காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை.
இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.
காந்தி-இர்வின் ஒப்பந்தம்:
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.
சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டல் :
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.
இந்தமுறை அரசு எதிர்ப்பை சமாளிக்க ஆயத்தமாக இருந்தது.
படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
விரைவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பட்டங்கள் மற்றும் மறியல் செய்த மக்கள் படைகொண்டு அடக்கப்பட்டனர்.
அதன் முக்கிய விதிமுறைகள் :
தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.
Question 3.
இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.
விடை:
நேரு அறிக்கை:
அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.
சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு
1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதிகள் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன.
அமைச்சரவைத் தூதுக்குழு:
பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகை செய்தது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள், மற்றும் வடகிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்றுவகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.
அ) வடஆப்பிரிக்கா
ஆ) தென்னாப்பிரிக்கா
இ) தென் அமெரிக்கா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தென்னாப்பிரிக்கா
Question 2.
……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
அ) பன்னிரெண்டாம்
ஆ) பதினெட்டாம்
இ) பத்தொன்பதாம்
ஈ) இருபதாம்
விடை:
இ பத்தொன்பதாம்
Question 3.
………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அ) அமிர்தசரஸ்
ஆ) நாக்பூர்
இ) தில்லி
ஈ) கொல்கத்தா
விடை:
அ) அமிர்தசரஸ்
Question 4.
ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அ) 10
ஆ) 100
இ) 1000
ஈ) 10000
விடை:
இ 1000
Question 5.
……………… ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.
அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1991
ஈ) நவம்பர் 1991
விடை:
அ) நவம்பர் 1919
Question 6.
……………. மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1920
ஈ) நவம்பர் 1902
விடை:
இ டிசம்பர் 1920
Question 7.
இந்திய தேசிய காங்கிரஸ் ……………… க்கு அங்கீகாரம் அளித்தது.
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) கோபால கிருஷ்ண கோகலே
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) காந்தியடிகள்
Question 8.
காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
அ) 98
ஆ) 87
இ 78
ஈ) 88
விடை:
இ 78
Question 9.
…………….. ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.
அ) 1898
ஆ) 1878
இ) 1888
ஈ) 1988
விடை:
ஆ) 1878
Question 10.
……………… ஆம் ஆண்டு லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.
அ) டிசம்பர் 1920)
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930
ஈ) அக்டோபர் 1919
விடை:
இ நவம்பர் 1930
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ……………… ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது.
விடை:
ஸ்மட்ஸ்-காந்தி
Question 2.
காந்தியடிகளுக்கு ………………….. ஆகியோரின் எழுத்துகளுடன் அறிமுகம் கிடைத்தது.
விடை:
டால்ஸ்டாய், ஜான் ராஸ்கின்
Question 3.
ரௌலட் சட்டத்தை ……………… என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6-ல் அழைப்புவிடுத்தார்.
விடை:
கருப்புச் சட்டம்
Question 4.
……………. மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விடை:
ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு
Question 5.
1922 பிப்ரவரி மாதம் ……………… வரிகொடா இயக்கம் பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
விடை:
பர்தோலி
Question 6.
1925ல் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு ……………… கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.
விடை::
சுயராஜ்ஜிய கட்சி
Question 7.
அரசியல் சாசன வரைவுக்கான குழுவின் ……………… நேரு அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
விடை:
கமிட்டி அறிக்கை
Question 8.
………………இல் இடஒதுக்கீடு வழங்குவது கிறித்து ஜின்னா சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
விடை:
மத்திய சட்டபேரவையில்
Question 9.
தமிழ்நாட்டில் ………………யிலிருந்து ………………வரை தண்டியாத்திரை போன்று ஒரு யாத்திரையை சி.ராஜாஜி மேற்கொண்டார்.
விடை:
திருச்சிராப்பள்ளி – வேதாரண்யம்
Question 10.
கான் அப்துல் கஃபார்கான் …………….. என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் இயக்கத்தை நடத்தினார்
விடை:
செஞ்சட்டைகள்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Question 1.
கூற்று : ஜாலியன் வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13ல் நடந்தது.
காரணம் : ஜெனரல் டயரின் தலைமையில் நடந்தது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
Question 2.
கூற்று : காந்தியடிகள் தனது 61வது வயதில் 24 நாட்களில் 241 மைல் கடந்து தண்டியை அடைந்தார்.
காரணம் : ஏப்ரல் 4ஆம் நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
IV. பொருத்துக.
விடை:
V. சுருக்கமான விடையளிக்கவும்.
Question 1.
இரட்டை ஆட்சி குறிப்பு வரைக.
விடை:
1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது.
நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன.
Question 2.
நேரு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகள் யாவை?
விடை:
இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.
மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.
மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்ம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையிராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இட ஒதுக்கீடு.
பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.
Question 3.
காந்தி இர்வின் ஒப்பந்தம் குறிப்பு வரைக.
விடை:
காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.
Question 4.
B.R. அம்பேத்கரின் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை எழுதுக.
விடை:
அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார்.
கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப்பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார்.
கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.
Question 5.
இந்திய அரசுச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசர் சட்டமும் ஒன்றாகும்.
மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் ‘ முக்கிய அம்சங்களாகும்.
Question 6.
காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல் பற்றிக் கூறு.
விடை::
1939இல் இரண்டாம் உலக போர் மூண்டது.
காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது.
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.
ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Question 7.
கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்ட அறிக்கை யாது?
விடை:
போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய அளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.
VI. விரிவான விடையளிக்கவும்.
Question 1.
ஒத்துழையாமை இயக்கத்தின் திட்டத்தின் கூறுகளை விவரி.
விடை:
பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.
நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.
1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.
அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.
அந்நியப் பொருள்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.