இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்-10th Std Social Science- Book Back Question And Answer
Question 1.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அ) சேமிப்பு மின்கலன்கள்
ஆ) எஃகு தயாரிப்பு
இ) செம்பு உருக்குதல்
ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு
விடை:
ஆ) எஃகு தயாரிப்பு
Question 2.
ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.
அ) 80% – 95%
ஆ) 70% க்கு மேல்
இ) 60% – 70%)
ஈ) 50% க்கும் குறைவு
விடை:
அ) 80% – 95%
Question 3.
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………
அ) ஆக்ஸிஜன்
ஆ) நீர்
இ) கார்பன்
ஈ) நைட்ரஜன்
விடை:
இ கார்பன்
Question 4.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..
அ) சேலம்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோயம்புத்தூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்
Question 5.
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..
அ) குஜராத்
ஆ) இராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரம்
ஈ) தமிழ்நாடு
விடை:
இ மகாராஷ்டிரம்
Question 6.
மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..
அ) உயிரி சக்தி
ஆ) சூரியன்
இ) நிலக்கரி
ஈ) எண்ணெய்
விடை:
ஆ) சூரியன்
Question 7.
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
அ) ஜார்கண்ட்
ஆ) பீகார்
இ) இராஜஸ்தான்
ஈ) அசாம்
விடை:
அ) ஜார்கண்ட்
Question 8.
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..
அ) போக்குவரத்து
ஆ) கனிமப்படிவுகள்
இ) பெரும் தேவை
ஈ) மின்சக்தி கிடைப்பது
விடை:
ஆ) கனிமப்படிவுகள்
II. பொருத்துக.
விடை:
III. சுருக்கமான விடையளி.
Question 1.
வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
விடை:
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் “இயற்கை வளம்” என்று அழைக்கப்படுகிறது.
புதுப்பிக்கக்கூடிய வளம் – சூரிய ஆற்றல்
புதுப்பிக்க இயலாத வளம் – நிலக்கரி
Question 2.
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
விடை:
ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ. உலோகக்கனிமங்கள், ஆ. அலோகக்கனிமங்கள்.
Question 3.
மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பீடுக.
விடை:
இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.
வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மெக்னீசியம் பயன்படுகின்றது.
Question 4.
இயற்கை எரிவாயு என்றால் என்ன?
விடை:
இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்மகரிம வாயுவாகும்.
இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள உயர் அல்கேன்கள் கலந்த கலவைகளால் ஆனது.
Question 5.
நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
விடை:
ஆந்தரசைட்: 80 முதல் 90%
பிட்டுமினஸ் : 60 முதல் 80%
பழுப்பு நிலக்கரி: 40 முதல் 60%
மரக்கரி: 40% கும் குறைவு.
Question 6.
இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற மாநிலங்களாகும்.
Question 7.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் :
மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
குஜராத் கடற்கரை (2வது பெரியது)
அகமதாபாத் – கலோல்பகுதி
IV. வேறுபடுத்துக.
Question 1.
புதுப்பிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்.
விடை:
Question 2.
உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்.
விடை:
Question 3.
வேளாண் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Question 4.
சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.
விடை:
Question 5.
மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி.
விடை
V. ஒரு பத்தியில் விடையளி.
Question 1.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
விடை:
பருத்தி நெசவாலைகள் :
இந்தியா இத்துறையில் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பாரம்பரிய தொழில்களான கைவினைப்பொருள்கள், சிறிய விசைத்தறிகள் போன்றவை லட்சக்கணக்கிலான கிராமப்புற மற்றும் புறநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் ஆதாரங்களாக உள்ளன.
பருத்தி இழையிலிருந்து , விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்.
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பத காலநிலை மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி, சிறந்த போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்களாக அமைகிறது.
மகாராஷ்டிரம், குஜராத் மேற்கு வங்காளம் உத்திரப்பிதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
ஈரோடு திருப்பூர், கரூர், சென்னை , திருநெல்வேலி, மதுரை தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
Question 2.
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
விடை
இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியப் பிரச்சினைகள் கீழே பட்டியிலிடப்பட்டுள்ளன.
மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு இல்லாமை.
கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் ……………… வகைப்படும்.
அ) 3
ஆ) 2
இ) 4
ஈ) 6
விடை
ஆ) 2
Question 2.
……………… புதுப்பிக்க இயலா வளங்களுள் ஒன்று.
அ) உயிரி வாயு
ஆ) காற்றாற்றல்
இ) நிலக்கரி
ஈ) ஒத சக்தி
விடை
இ நிலக்கரி
Question 3.
…………….. தனித்த நிலையில் அரிதாக காணப்படுகிறது.
அ) காப்பர்
ஆ) மாங்கனீசு
இ) இரும்புத்தாது
ஈ) பாக்சைட்
விடை
இ இரும்புத்தாது
Question 4.
லைமனைட் இரும்பு தாது படிவில் ……………… இரும்புள்ளது.
அ) 72.4%
ஆ) 55%
இ) 69.9%
ஈ) 48.2%
விடை
ஆ) 55%
Question 5.
இந்தியர்கள்…………….. வளங்கள் ஹேமடைட் வகையையும், மேக்னடைட் வகையையும் சார்ந்தது.
அ) பாக்சைட்
ஆ) இரும்புத்தாது
இ) தாமிரம்
ஈ) மாங்கனீசு
விடை
இரும்புத்தாது
Question 6.
இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.
அ) அசாம்
ஆ) பீகார்
இ) ஜார்கண்ட்
ஈ) ராஜஸ்தான்
விடை
இ ஜார்கண்ட்
Question 7.
………………. ஒரு வெளிர் சாம்பல் நிறம் உடையது.
அ) ஜிப்சம்
ஆ) பாக்சைட்
இ) மைக்கா
ஈ) மாங்கனீசு
விடை
ஈ) மாங்கனீசு
Question 8.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் ……………….. ஆகும்.
அ) தாமிரம்
ஆ) இரும்பு தாது
இ) சுண்ணாம்புகல்
ஈ) மைக்கா
விடை
அ) தாமிரம்
Question 9.
அலுமினியத்தின் முக்கிய தாது ……………. ஆகும்.
அ) மேக்னடைட்
ஆ) ஹோமடைட்
இ) லிக்னைட்
ஈ) பாக்சைட்
விடை
ஈ) பாக்சைட்
Question 10.
…………….. மின்கடத்தா தன்மையுடையவை.
அ) தாமிரம்
ஆ) மைக்கா
இ) பாக்சைட்
ஈ) மாங்கனீசு
விடை
ஆ) மைக்கா
Question 11.
ஜிப்சம் என்பது …………………….. சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும்.
அ) கால்சியம்
ஆ) பொட்டாசியம்
இ) பாஸ்பரஸ்
ஈ) எதுவுமில்லை
விடை
அ) கால்சியம்
Question 12.
நிலக்கரி ……………… வகைப்படும்.
அ) 6
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை
ஈ) 4
Question 13.
……………… கருப்புத் தங்கம் எனப்படுகிறது.
அ) மைக்கா
ஆ) ஜிப்சம்
இ) நிலக்கரி
ஈ) எதுவுமில்லை
விடை
இ நிலக்கரி
Question 14.
……………… தாது எண்ணெய் எனப்படுகிறது.
அ) நிலக்கரி
ஆ) பெட்ரோலியம்
இ) இயற்கை வாயு
ஈ) உயிரி வாயு
விடை
ஆ) பெட்ரோலியம்
Question 15.
GAILன் தலைமையகம் ……………… உள்ள து.
அ) மும்பை
ஆ) சீனா
இ) புதுடெல்லி
ஈ) குஜராத்
விடை
இ புதுடெல்லி
Question 16.
தேசிய அனல் மின் சக்தி நிலையம் ………………ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1985
விடை
ஆ) 1975
Question 17.
……………… சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படும்.
அ) காற்றாற்றல்
ஆ) ஓதசக்தி
இ) நீர்மின்சக்தி
ஈ) சூரிய சக்தி
விடை
இ நீர்மின்சக்தி
Question 18.
இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் ……………… இல் உள்ளது.
அ) அலகாபாத்
ஆ) பரிதாபாத்
இ) அகமதாபாத்
ஈ) எதுவுமில்லை
விடை
ஆ) பரிதாபாத்
Question 19.
…………….. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) ஆந்திரம்
விடை
ஆ) தமிழ்நாடு
Question 20.
உயிரின கழிவிலிருந்து ……………… பெறப்படுகிறது.
அ) உயிரி சக்தி
ஆ) காற்றாற்றல்
இ) ஓதசக்தி
ஈ) நீராற்றல்
விடை
அ) உயிரி சக்தி
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
கனிம வளங்கள் …………. வகைப்படும்.
விடை:
இரண்டு
Question 2.
வளங்கள் ………… வகைப்படும்.
விடை
இரண்டு
Question 3.
புவிமேலோட்டில் அதிகம் காணப்படுவது
விடை
இரும்புத்தாது
Question 3.
மாங்கனீசு ……….. நிறமுடையது.
விடை:
வெளிர்
Question 4.
…………… மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம்.
விடை
தாமிரம்
Question 5.
………….. பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
விடை
அலுமினியம்
Question 7.
…………….. ஒளிபுகும் தன்மையுடையது.
விடை
மைக்கா
Question 8.
………………….. என்பது கால்சியம் சல்பேட்டின் நீர்மக்கனிமம்.
விடை
ஜிப்சம்
Question 9.
……………… எளிதில் எரியக்கூடியது.
விடை
நிலக்கரி
Question 10.
…………… என்ற சொல் பெட்ரோ மற்றும் ஒலியம் எனப் பிரிக்கலாம்.
விடை
பெட்ரோலியம்
Question 11.
…………… எண்ணெய் வயல் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
விடை
மும்பை ஹை
Question 12.
இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம் …………..
விடை
GAIL
Question 13.
……………………. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்களாகும்.
விடை
தூத்துக்குடி (ம) எண்ணூர்
Question 14.
…………… ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
விடை
நீர்மின்சக்தி
Question 15.
அணுக்கரு பிளவின் மூலம் ……………….. பெறப்படுகிறது.
விடை
அணுசக்தி
Question 16.
இந்தியாவின் சூரியசக்தி நிறுவனத்தின் தலைமையிடம்
விடை
புதுதில்லி
Question 17.
பருத்தி இழையிலிருந்து, விதையைப் பிரித்தெடுக்கும் முறை ………….
விடை
ஜின்னிங்
Question 18.
தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம் ………………… ஆகும்.
விடை
கொல்கத்தா
Question 19.
…………….. என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார் ஆகும்.
விடை:
சணல்
III. பொருத்துக .
விடை
IV. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
அ) மைக்கா
ஆ) சுண்ணாம்புக்கல்
இ) ஜிப்சம்
ஈ) இரும்பு
விடை
ஈ) இரும்பு
Question 2.
அ) கோலோரிஸ்
ஆ) ஆந்திரசைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) லிக்னைட்
விடை
அ) கோலோரிஸ்
V. சுருக்கமான விடையளிக்கவும்.
Question 1.
இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் யாவை?
விடை
இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் கொல்கத்தா.
இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்.
Question 2.
இரும்புத் தாது படிவு மற்றும் இரும்பின் அளவை பட்டியலிடுக.
விடை
Question 3.
பாக்சைட்டின் பயன்பாடுகள் யாவை?
விடை
அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுகிறது. சிமெண்ட் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது.
Question 4.
புதுப்பிக்க இயலா வளங்களைக் குறிப்பிடுக.
விடை
நிலக்கரி
பெட்ரோலியம் / கச்சா எண்ணெய்
இயற்கை எரிவாயு.
Question 5.
மத்தியப் பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் – குறிப்பு வரைக.
விடை
பட்டு வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
Question 6.
வனவளம் சார்ந்த தொழிற்சாலைகள் யாவை?
விடை
காடுகள், காகித தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள்.
அரக்கு விளையாட்டு பொருள்கள்
ஏட்டுப் பலகை போன்ற பொருள்களைத் தருகின்றன.
VI. வேறுபடுத்துக.
Question 1.
நீர்மின் சக்தி மற்றும் காற்று சக்தி
விடை
Question 2.
இரும்பு எஃகு தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிற்சாலைகள்.
விடை
VII. ஒரு பத்தியில் விடையளி.
Question 1.
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் – கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் வேறுபடுத்துக.
விடை
Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்களைப் பற்றி விவரி.
விடை
அ. நீர்மின்சக்தி:
நீர்மின்சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
இம்மின்சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மின் ஆற்றலாக கருதப்படுகிறது.
இந்தியாவானது நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மிக அதிக திறனை பெற்றுள்ள ஒரு மிகச் சிறந்த ஒரு நாடாக உள்ளது.
ஆ. சூரிய ஆற்றல் / சக்தி:
சூரிய ஆற்றல் சூரிய ஒளியை நேரடியாகவோ மின் அழுத்திக் கொண்டோ அல்லது செறிவூட்டம் கொண்ட சூரிய ஆற்றல் மூலம் மின்னாற்றலாக மாற்றப்படுதலாகும்.
மின் அழுத்திகள், ஒளிமின் விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.
ஆந்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
இ. காற்று சக்தி :
காற்று வீச்சு அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது.
இது ஒரு மலிவான மற்றும் மாசற்ற ஆற்றல் வளமாகும்.
காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஈ. உயிரி சக்தி :
விலங்குகளின் கழிவுகள், சமையல் கழிவுகள், ஆகாய தாமரை கழிவுகள், வேளாண்கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்ற உயிரின கழிவுகளிலிருந்து உயிரி சக்தி பெறப்படுகிறது.
இது மாசற்ற மற்றும் மலிவான ஒரு எரிசக்தி வளமாகும்.
உயிரி எரிசக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உ. ஓத மற்றும் அலை சக்தி:
கடல் ஒதங்கள் மற்றும் கடல் அலைகள் என இரண்டு வள ஆதாரங்களிலிருந்து மின் ஆற்றல் பெறப்படுகிறது.
காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.