Ads

வெப்பம் -9th Std Science Physics-Book Back Questions and Answers

வெப்பம்  -9th Std Science Physics-Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.

கலோரி என்பது எதனுடைய அலகு?

அ) வெப்பம்

ஆ) வேலை

இ) வெப்பநிலை

ஈ) உணவு

விடை :

அ) வெப்பம்

Question 2.

வெப்பநிலையின் SI அலகு

அ) ஃபாரன்ஹீ ட்

ஆ) ஜூல் இ செல்சியஸ்

ஈ) கெல்வின்

விடை :

இ) கெல்வின்

Question 3.

ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2 :1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?

அ) இரண்டும்

ஆ) கம்பி – 2

இ கம்பி – 1

ஈ) எதுவும் இல்லை

விடை : :

இ) கம்பி -1

Question 4.

மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?

அ) வெப்பக்கதிர்வீச்சு

ஆ) வெப்பக்கடத்தல்

இ வெப்பச்சலனம்

ஈ) ஆ மற்றும் இ

விடை :

ஆ) வெப்பக்கடத்தல்

Question 5.

வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.

அ) சூரிய மின்கலம்

ஆ) சூரிய அழுத்த சமையற்கலன்

இ) வெப்பநிலைமானி

ஈ) வெற்றிடக் குடுவை

விடை :

இ) வெற்றிடக் குடுவை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக :

Question 1.

வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை …………………………….

விடை :

வெப்பக்கதிர்வீசல்

Question 2.

பகல் நேரங்களில், காற்று ……………………………. லிருந்து ……………………………. க்கு பாயும்

விடை ::

கடல், நிலம்

Question 3.

திரவங்களும், வாயுக்களும் ……………………………. முறையில் வெப்பத்தைக் கடத்தும்

விடை ::

குறைவான

Question 4.

வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ……………………………. மாறுவதை என்கிறோம்.

விடை :

உள்ளுறை வெப்பம்

III. கருத்து மற்றும் காரணம் வகைக் கேள்விகள்

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :

அ. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

ஆ. கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.

இ. கருத்து சரி, காரணம் தவறு.

ஈ. கருத்து தவறு, காரணம் சரி.

Question 1.

கருத்து : தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.

காரலாம் : தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.

விடை :

(அ) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

Question 2.

கருத்து : மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.

காரணம் : சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.

விடை :

(ஆ) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.

கருத்து : வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.

காரணம் : நீரின் கொதிநிலை 10°C

விடை :

(இ) கருத்து சரி, காரணம் தவறு

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.

வெப்பக் கடத்தல் – வரையறு.

விடை :

அதிக வெப்பநிலை உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு.

Question 2.

பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?

விடை :

இரட்டைச் சுவர்களுக்கிடையே உள்ள இடைவெளியில் வெற்றிடம் உள்ளது.

வெற்றிடம் வெப்பத்தைக் கடத்தாது.

வெற்றிடம் வெளியே உள்ள வெப்பத்தை உட்புறம் கடத்துவதில்லை.

எனவே பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலனில் வைக்கப்படுகிறது.

Question 3.

மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிராக இருப்பது ஏன்?

விடை :

மண்பானையில் உள்ள நுண்துளைகள் வழியே கசியும் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும்.

ஆவியாதல் மூலம் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் உள்ள நீர் குளிர்ச்சியாக இருக்கும்.

Question 4.

வெப்பச்சலனம் – வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.

விடை ::

Question 5.

கோடைக்காலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

விடை :::

வெள்ளை நிற ஆடைகள் வெப்ப பிரதிபலிப்பான்கள்.

வெப்பத்தை உள்ளே அனுமதிக்காது.

எனவே கோடைக்காலங்களில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Question 6.

தன் வெப்ப ஏற்புத் திறன் – வரையறு.

விடை ::

ஓரலகு நிறையுள்ள (1kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு 1°C அல்லது K உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல்.

SI அலகு : Jkg-1k-1

Question 7.

வெப்ப ஏற்புத் திறன் – வரையறு.

விடை ::

ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல்.

SI அலகு J/KT

Question 8.

உருகுதலின் உள்ளுறை வெப்பம் – வரையறு.

விடை ::

உருகுதல் நிகழ்வின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பம் உறைதல் நிகழ்வின் போது வெப்பநிலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் வெளிவிடப்படும்.

இந்த வெப்பம் உருகுதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

V. விரிவாக விடையளி:

Question 1.

அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.

விடை ::

1. சூடான காற்று பலூன்கள் :

சூடான பலூன்களின் அடிப்பகுதியில் காற்று மூலக்கூறுகள் வெப்பத்தால் மேல் நோக்கி நகருகிறது.

அடர்த்தி குறைந்த சூடான காற்றால் பலூன் மேல் நோக்கி நகரும்.

சூடான காற்று மேலே செல்வதால் குளிர் காற்று கீழே வரும்.

இச்செயல் தொடர்ந்து நடைபெறும்.

2. நிலக்காற்றும் கடல்காற்றும் :

பகல் நேரங்களில் நிலம் கடல் நீரை விட அதிகமாக சூடாவதால் சூடான காற்று மேலே செல்கிறது. எனவே குளிர்ந்த காற்று கடல் பகுதியிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.

இது கடல் காற்று எனப்படும். இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல்நீரை விட விரைவாக குளிர்வடைகிறது. எனவே நிலப்பரப்பிலிருந்து காற்று கடலை நோக்கி வீசுகிறது. இது நிலக்காற்று எனப்படும்.

3. காற்றோட்டம் :

காற்று அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து குறைவான பகுதிக்கு செல்லும்.

சூடான காற்று மேலெழும்புவதால் அழுத்தம் குறைகிறது. எனவே குளிர்ந்த காற்று அதிக அழுத்தப் பகுதியிலிருந்து அங்கு வருகிறது.

இதுவே காற்றோட்டத்தை உருவாக்குகிறது.

4. புகை போக்கிகள் :

சமையல் அறைகளிலும், தொழிற்சாலைகளிலும் உயரமான புகைபோக்கிகள் உள்ளன.

இங்கு சூடான காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால் வளிமண்டலத்திற்கு செல்கின்றன.

Question 2.

நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக.

விடை ::

நீர் திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுகிறது.

சாதாரண வெப்பநிலையில் நீர் திரவமாக உள்ளது.

100°C க்கு வெப்பப்படுத்தும் போது நீராவியாக மாறுகிறது.

நீராவியை குளிர்வித்தால் மீண்டும் திரவமாகிறது.

அத்திரவத்தை 0°Cக்கு குளிர்வித்தால் பனிக்கட்டிய திண்ம நிலைக்கு மாறுகிறது.

இவ்வாறு வெப்பநிலையை மாற்றும்போது நீர் தன் நிலையை மாற்றுகிறது. இது நிலைமாற்றம் எனப்படும்.

நிலை மாற்றத்தின் படிநிலைகள் :

உருகுதல் : ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல். இயற்பியல் – பாடம்-7 பா

உறைதல் : ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறுதல்.

ஆவியாதல் : ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல் ஆவியாதல் எனப்படும்.

குளிர்தல் : ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுதல் எனப்படும்.

Question 3.

நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிருபிக்கலாம்? சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்?

விடை ::

சோதனை :

ஒரு சோதனைக் குழாயில் பனிக்கட்டியை (ICE) கம்பியால் சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

சோதனைக் குழாயில் 4ல் 3 பங்கு நீரால் நிரப்ப வேண்டும்.

பனிக்கட்டியானது சோதனைக் குழாயில் அடிப்பகுதியில் பிளக்கு இருக்குமாறு வைக்க வேண்டும்.

இப்போது சோதனைக்குழாயை மேல் பகுதியில் புன்சன் விளக்கால் சூடேற்ற வேண்டும்.

சோதனைக்குழாயின் மேற்பகுதியில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பிக்கும்.

ஆனால் அடிப்பகுதியிலுள்ள நீரானது குளிர்ச்சியாக இருக்கும்.

இதிலிருந்து நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தும் என்பதை அறியலாம்.

உலோகங்கள் வெப்பத்தை நன்கு கடத்தும். எனவே சமைக்கும் போது அலுமினியம் (அ) தாமிர பாத்திரத்தைப் பயன்படுத்தி எளிதாக நீரை சூடுபடுத்தலாம்.

VI. கணக்குகள்

Question 1.

25 கிராம் நீரை 0°C இருந்து 100°Cக்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் அலகில் கணக்கிடுக. அதனை கலோரியாக மாற்றுக. (விடை : 10450 J)

விடை :: :

(நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் = 4.18J/g°C)

Q = mst

= 25 x 4.18 x 100

= 25 x 418

Q = 10450 J

Question 2.

90’C ல் இருந்து 100கி நீரையும் 20’C ல் இருக்கும் 600கி நீரையும் கலக்கும் போது கிடைக்கும் கலவையின் இறுதி வெப்பநிலை எவ்வளவு? (விடை : 30°C)

விடை :: :

90°Cல் உள்ள நீர் இழக்கும் வெப்பநிலையானது 20°Cல் உள்ள நீரில் ஏற்கப்படுவதால் இறுதி வெப்பநிலை

C x (100/1000) x (90° – T) = C x (600/1000) x (T – 20°)

(90° – T) = 6 x (T – 20°)

(90° – T) = 6 T – 1200

T + 6 T = 120° + 900

7T = 2100

T = 30°C

இறுதி வெப்பநிலை 30°C

Question 3.

0°C-ல் இருக்கும் உகி பனிக்கட்டியை 20°C நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு. விடை : 836000y

(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000J/kg, நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் = 4200J/kg/K)

விடை ::

பனிக்கட்டியின் நிறை m = 2 கிகி.

நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (hfg) = 334000J/kg

நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் Cp = 4200 J/kg/k

2kg பனிக்கட்டியை 20°C நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றல்

= (mhfg) + m CpΔT

= [2 x 334000] + [2 x 4200 x (20 – 0)]

= [2 x 334000] + [2 x 4200 x 20]

= (668000) + (168000)

தேவையான வெப்ப ஆற்றல் = 836000 = 836000J

II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.

இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல் ……………………………

விடை ::

அக ஆற்றல்

Question 2.

ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அதன் …………………………… ஆற்றல் அதிகரிக்கிறது.

விடை :

இயக்க

Question 3.

வெப்பநிலைமானிகளில் பயன்படும் திரவம் ……………………………

விடை :

பாதரசம்

Question 4.

வெப்பத்தால் அதிகம் விரிவடைவது ……………………………

விடை :

வாயு

Question 5.

சிறந்த வெப்பக்கடத்திக்கு உதாரணம் ……………………………

விடை :

தாமிரம்

Question 6.

…………………………… முறையில் வெப்பம் பரவ பருப்பொருள் ஊடகம் தேவையில்லை

விடை : :

வெப்பக்கதிர்வீச்சு

Question 7.

…………………………… நிற பரப்பு வெப்பத்தை அதிகமாக உட்கவரும்

விடை : :

கருமை

Question 8.

இரவு நேரத்தில் காற்று தரையிலிருந்து கடலை நோக்கி வீசும் இது …………………………… என அழைக்கப்படுகிறது.

விடை :

நிலக்காற்று

Question 9.

……………………………. நேரத்தில் குளிர்க்காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும்

விடை :

பகல்

Question 10.

சூரிய வெப்பமானது …………………………… முறையில் புவியை அடைகிறது.

விடை :

கதிர்வீச்சு

Question 11.

ஃப்ரான்ஹீட் வெப்பநிலை மானியில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை

விடை ::

180

Question 12.

…………………………… ஆடை ஒரு வெப்ப அரிதிற் கடத்தி

விடை :

கம்பளி

Question 13.

வெற்றிடத்தில் கூட நடைபெறுவது ……………………………

விடை ::

வெப்பக் கதிர்வீச்சு

Question 14.

செல்சியஸ் அளவீட்டில் புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளி

விடை : :

100 பகுதிகள்

Question 15.

ஃப்ரான்ஹீட் அளவீட்டை செல்சியஸாக மாற்றும் சமன்பாடு

விடை ::

C = 5/9 (F-32)

Question 16.

தனிச்சுழி வெப்பநிலை ……….

விடை :

OK

Question 17.

ஒரு வாயுவின் அழுத்தமும், கன அளவும் சுழியாக மாறும் வெப்பநிலை …………………………… எனப்படும்

விடை ::

தனிச்சுழி வெப்பநிலை

Question 18.

ஓரலகு நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை ஓரலகு உயர்த்த தன்வெப்ப தேவையான வெப்ப ஆற்றலின் அளவு …………………………… எனப்படும்

விடை :

ஏற்புத்திறன்

Question 19.

நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் …………………………… J/Kg°C

விடை ::

4200

Question 20.

கண்ணாடியின் தன்வெப்ப ஏற்புத்திறன் …………………………… Jkg-1k-1

விடை :

504

Question 21.

நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தக் காரணம் …………………………… அதிகம்

விடை :

தன்வெப்ப ஏற்புத்திறன்

Question 22.

தொழிற்சாலைகளிலும், இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தை ப்பதற்கு …………………………… பயன்படுகிறது.

விடை :

தனி

Question 23.

ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல் …………………………… ஆகும்.

விடை :

வெப்ப ஏற்புத்திறன்

Question 24.

வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு

விடை :

J/K

Question 25.

பருப்பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவது …………………………… எனப்படும்

விடை ::

நிலை மாற்றம்

Question 26.

நீரின் கொதிநிலை …………………………… °C

விடை :

100

Question 27.

பனிக்கட்டியின் உருகுநிலை ……………………………

விடை :

°C

Question 28.

ஒரு பொருள் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுவது …………………………… எனப்படும்

விடை ::

உருகுதல்

Question 29.

ஒரு பொருள் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு வரும்போது வெப்பம் ……………………………

விடை :

வெளியிடப்படும்

Question 30.

திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல் …………………………… எனப்படும்.

விடை ::

ஆவியாதல்

Question 31.

வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறுதல் …………………………… ஆகும்.

விடை ::

குளிர்தல்

Question 32.

நீரின் கொதிநிலை மற்றும் ஒடுக்கல் நிலை …………………………… °c

விடை :

100°C

Question 33.

திண்மம் நேரடியாக வாயுநிலைக்கு மாறுதல் …………………………… ஆகும்.

விடை :

பதங்கமாதல்

Question 34.

உள்ளுறை வெப்பம் என்பது …………………………… எனப்படும்.

விடை ::

மறைவெப்பம்

Question 35.

ஆவியாதலின் போது வெப்பம் ……………………………

விடை :

உட்கவரப்படும்

Question 36.

குளிர்தலின் போது வெப்பம்

விடை :

வெளியிடப்படும்

Question 37.

தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு ……………………………

விடை :

JKg-1

Question 38.

தன் உள்ளுறை வெப்பத்தின் சமன்பாடு ……………………………

விடை :

L = Q/m

Question 39.

பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் …………………………… Jg-1

விடை : :

336

Question 40.

வெப்பநிலை, அழுத்தம் மற்றும் …………………………… ஆகியவற்றைப் பொருத்து நிலைமாற்றம் நடக்கும்

விடை :

வெப்பப் பரவல்

Question 41.

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாப்பொருட்களும் …………………………… கட்டமைக்கப்பட்டுள்ளன

விடை : :

மூலக்கூறுகளால்

Question 42.

வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்பப் ……………………………

விடை ::

பிரதிபலிப்பான்கள்

Question 43.

ஒரு பொருள் திடநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ……………………………

விடை :

உருகுதல்

Question 44.

திரவப் பொருள் வாயு நிலைக்கு மாறும் வெப்பநிலை …………………………… எனப்படும்

விடை :

கொதிநிலை

Question 45.

ஒரு பொருள் வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ……………………………

விடை :

குளிர்தல்

Question 46.

தன் வெப்ப ஏற்புத்திறனின் குறியீடு ……………………………

விடை :

c

Question 47.

…………………………… நடைபெற பருப்பொருட்கள் தேவையில்லை

விடை :

வெப்பக்கதிர்வீச்சு

Question 48.

அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தம் ……………………………

விடை :

273.15°c

Question 49.

பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் ……………………………

விடை :

139JKg-1k-1

Question 50.

நீரின் கொதிநிலை மற்றும் ஒடுக்கல் நிலை

விடை :

100°C

II. பொருத்துக.

III. அலகுகளை பொருத்துக

IV. கருத்து மற்றும் காரண வகை

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு :

a) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

b) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.

c) கருத்து சரி, காரணம் தவறு.

d) கருத்து தவறு, காரணம் சரி.

Question 1.

கருத்து : இரயில் பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும்.

காரணம் : வெயில் காலங்களில் அதிக வெப்பம் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்யும்.

விடை

a) கருத்தும், காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

Question 2.

கருத்து : நாய் தன் நாக்கை வெளியே தொங்கவிட்டு சுவாசிக்கும் போது நாக்கிலிருந்து ஈரப்பதம் திரவமாகி பின் ஆவியாகிவிடும்.

காரணம் : திரவம் வாயு நிலைக்கு மாற வெப்ப ஆற்றல் தேவை. இந்த வெப்பம் நாயின் நாக்கிலிருந்து பெறப்பட்டு நாய் தன்னை குளிர்வித்துக் கொள்கிறது.

விடை

a) கருத்தும், காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

Question 3.

கருத்து : பனிக்கட்டியானது முழுவதும் திரவமாக மாறும் வரை வெப்பநிலை 0 C ல் இருக்கும்.

காரணம் : பனிக்கட்டியின் உருகு நிலை 100°C

விடை:

c) கருத்து சரி, காரணம் தவறு

Question 4.

கருத்து : நீர் ஒரு சிறந்த வெப்பங்கடத்தி

காரணம் : நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம்

விடை

d) கருத்து தவறு, காரணம் சரி

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.

வெப்பநிலை என்றால் என்ன? அலகு யாது?

விடை :

ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவு வெப்பநிலை எனப்படும்.

வெப்பநிலையின் SI அலகு: கெல்வின் (K)

பிற அலகுகள்: செல்சியஸ், பாரன்ஹீட்

Question 2.

வெப்பநிலையை அளவிடும் மூன்று அளவீடுகள் யாவை?

விடை:

பாரன்ஹீ ட் அளவீடு

செல்சியஸ் (அ) சென்டிகிரேடு அளவீடு

கெல்வின் (அ) தனித்த அளவீடு

Question 3.

கெல்வின் வரையறு.

விடை

நீரின் மும்மைப் புள்ளியின் 1/273.15 பங்கு ஒரு கெல்வின் ஆகும்.

Question 4.

உருகுநிலை என்றால் என்ன?

விடை :

ஒரு திடப்பொருள் தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றும் வெப்பநிலை உருகுநிலை எனப்படும்.

பனிக்கட்டியின் உருகு நிலை 0°C

Question 5.

கொதிநிலை என்றால் என்ன?

விடை

எந்த வெப்பநிலையில் திரவப் பொருள் வாயு நிலைக்கு மாறுகிறதோ அந்த வெப்பநிலை கொதிநிலை எனப்படும்.

நீரின் கொதிநிலை 100°C

Question 6.

பதங்கமாதல் என்றால் என்ன?

விடை:

வெப்பப்படுத்தும்போது திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு.

எ.கா அயோடின், நாப்தலின், உலர் கார்பன் – டை – ஆக்ஸைடு

Question 7.

உருகுதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?

விடை :

உருகுதலின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பம் உறைதல் நிகழ்வின் போது வெப்ப நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வெளியிடப்படும் இந்த வெப்பம் உருகுதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

Question 8.

ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் என்றால் என்ன?

விடை

ஆவியாதலின் போது வெப்பம் உட்கவரப்பட்டு அதே வெப்பம் குளிர்தல் நிகழ்வின் போது வெப்பநிலையில் மாற்றமில்லாமல் வெளியிடப்படும்.

இந்த வெப்பம் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

Question 9.

தன் உள்ளுறை வெப்பநிலை – வரையறு.

விடை:

ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் போது வெப்பநிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் ஆற்றல் தன் உள்ளுறை வெப்பநிலை ஆகும்.

SI அலகு J/Kg

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.

வெப்பச்சலனம் என்றால் என்ன? காற்றில் ஏற்படும் வெப்பச் சலனத்தை விளக்கு.

விடை

ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவது வெப்பச் சலனம் எனப்படும்.

நிலப்பகுதியில் வெப்பமாகும் காற்று விரிவடைகிறது. அதனால் அடர்த்தி குறைகிறது.

இத்தகைய காற்று மூலக்கூறுகள் மேலே செல்ல கனமான குளிர் காற்று மூலக்கூறுகள் கீழே வருகின்றன.

இங்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுகிறது.

Question 2.

அன்றாட வாழ்வில் வெப்பக்கடத்தல் பற்றி விவரி.

விடை

உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக்கடத்திகள். அதனால்தான், அலுமினியப் பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.

பாதரசம் சிறந்த வெப்பக்கடத்தியாக இருப்பதால் அதை வெப்ப நிலைமானியில் பயன்படுத்துகிறோம். Samacheer Kalvi 9th Science Guide Chapter 6 ஒளி

நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளை உடுத்துகிறோம். கம்பளி ஒரு அரிதிற் கடத்தி. எனவே உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்குக் கடத்தாமல் வைத்திருக்கும்.