Ads

எண்களும் தொடர்வரிசைகளும் Ex 2.1-10th Std Maths-Book Back Question And Answer

எண்களும் தொடர்வரிசைகளும் Ex 2.1-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

3 ஆல் வகுக்கும் போது மீதி 2 – ஐத் தரக்கூடிய அனைத்து மிகை முழுக்களையும் காண்க.

தீர்வு :

a மற்றும் b (a>b) இரு மிகை முழுக்கள் எனில்

a = bq + r,0 ≤ r < b என்றவாறு , r எனும் தனித்த மிகை முழுக்கள் கிடைக்கும். இங்கு a = b(3)+2)

b = 0, எனில் = 0(3) + 2 = 2

b = 1, எனில் = 1(3) + 2 = 5

b = 2, எனில் = 2(3) + 2 = 8

b = 3, எனில் = 3(3) + 2 = 11.

எனவே மிகை முழுக்கள் = 2, 5, 8, 11…..

கேள்வி 2.

ஒருநபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினார். எத்தனை வரிசைகள் முழுமை பெறும் எனவும் மற்றும் எத்தனை பூந்தொட்டிகள் மீதமிருக்கும் எனவும் காண்க.

தீர்வு :

a மற்றும் b (a > b) என்பன ஏதேனும் இரு மிகை முழுக்கள் எனில் a = bq+r,0≤r<b

என்றவாறு q, r எனும் தனித்த மிகை முழுக்கள் கிடைக்கும்.

இங்கு a = 532, b = 21

532 = 25 x 21 + 7

எனவே முழுமை பெறும் வரிசைகள் = 25

மீதமிருக்கும் பூந்தொட்டிகள் எண்ணிக்கை = 7

கேள்வி 3.

தொடர்ச்சியான இரு மிகை முழுக்களின் பெருக்கற்பலன் 2 ஆல் வகுபடும் என நிறுவுக.

தீர்வு :அடுத்தடுத்த இரண்டு மிகை முழுக்கள் x, x+1 என்க.

இதன் பெருக்கல் பலன் = x(x + 1) = x2 + x

தீர்வுவகை 1:

x ஒரு இரட்டை எண் எனில்,x = 2k

இப்பொழுது x + x = (2k)2 +2k

= 4k2 +2k

= 2(2k + 1)

= 2 ஆல் வகுபடும்.

தீர்வுவகை 2:

x ஒரு ஒற்றை எண் எனில் x = 2k +1

இப்பொழுது x2 + x = (2k + 1)2 + 2k + 1

= 4k2 + 4k + 1 + 2k +1

= 4k2 + 6k + 2

= 2(2k2 + 3k + 1)

= 2 ஆல் வகுப்படும்.

எனவே தொடர்ச்சியான இருமிகை முழுக்களின் பெருக்கல்பலன் 2 ஆல் வகுப்படும்.

கேள்வி 4.

a, b மற்றும் C என்ற மிகை முழுக்களை 13 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் முறையே 9, 7 மற்றும் 10 எனில் a+b+c ஆனது 13 ஆல் வகுபடும் என நிரூபி.

தீர்வு :

a மற்றும் b (a > b) என்பன ஏதேனும் இரு மிகை முழுக்கள் எனில் a = bq+r,0<r இங்கே a = 13q + 9

b = 13q + 7

c = 13q + 10

எனவே a + b + c = 13q + 9 + 13q + 7 + 13q + 10

= 39q + 26

= 13 (3q +2)

13 ஆல் வகுபடும்.

எனவே a+b+c ஆனது 13 ஆல் வகுபடும்.

கேள்வி 5.

எந்த மிகை முழுவின் வர்க்கத்தையும் 4 ஆல் வகுக்கும்போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும் என நிறுவுக.

தீர்வு :

k என்பது ஏதேனும் மிகை முழு என்க

k = 4k எனில்

k2 = 16k2

k2 = 4 x 4k2 + 0

(மீதி r = 0)

k = 4k + 1 எனில்

k2 = (4k + 1)

k2 = 16k2 + 8k + 1

= 4(4k2 + 2k) + 1

(மீதி r = 1)

எனவே எந்த மிகை முழுஎண் வர்க்கத்தையும் 4 ஆல் வகுக்கும் போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும்.

கேள்வி 6.

யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றின் மீ.பொ.வ காண்க.

(i) 340 மற்றும் 412

(ii) 867 மற்றும் 255

(iii) 10224 மற்றும் 9648

(iv) 84, 90 மற்றும் 120.

தீர்வு ::

(i) 340 மற்றும் 412

a, b என்பவை ஏதேனும் இரண்டு மிகை முழுக்கள் மற்றும் (a>b) எனில்

a = bq + r,0 ≤ r < b

இங்கு 412 = 340 x 1 + 72

340 = 72 x 4 + 52

72 = 52 x 1 + 20

52 = 20 x 2 + 12

20 = 12 x 1 + 8

12 = 8 x 1 + 4

8 = 4 x 2 + 0

340 மற்றும் 412 ன் மீ.பொ.வ = 4

(ii) 867 மற்றும் 255

867 = 255 x 3 + 102

255 = 102 x 2 + 51

102 = 51 x 2 + 0

867 மற்றும் 255 ன் மீ.பொ,வ 81

(iii) 10224 மற்றும் 9648

10224 = 9648 x 1 + 576

9648 = 576 x 16 + 432

576 = 432 x 1 + 144

432 = 144 x 3 + 0

10224 மற்றும் 9648 ன் மீ. பொ. வ = 144

(iv) 84, 90 மற்றும் 120

90 = 84 x 1 +6

84 = 6 x 14 + 0

84, மற்றும் 90 மீ.பொ.வ = 6

120 = 6 x 20 + 0

84, 90 மற்றும் 120 ன் மீ. பொ. வ = 6

கேள்வி 7.

1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும்போது மீதி 12 – ஐத் தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க. தீர்வு :

1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி 12 எனில் நமக்கு தேவையான எண் 1230 -12 =1218, 1926-12 =1914 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியாகத்தான் இருக்கும்.

எனவே 1914 = 1218 x 1 + 696

1218 = 696 x 1 + 522

522 = 174 x 3 + 0

1218 மற்றும் 1914 ன் மீ.பொ.வ = 174

கேள்வி 8.

32 மற்றும் 60 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி d என்க . d = 32x + 60y எனில் x மற்றும் y என்ற முழுக்களைக் காண்க.

தீர்வு :

‘d’ என்பது 32 மற்றும் 60ன் மீ. பொ. வ என்க.

60 = 32 x 1 + 28

32 = 28×1+4|

28 = 4×7 +0

எனவே 32 மற்றும் 60ன் மீ. பொ. வ = 4

d = 4

ஆகையால் 4 = 32x + 60y

4 = 32(2) + 60(-1)

= 64 – 60

= 4

எனவே x = 2 மற்றும் y = -1

கேள்வி 9.

ஒரு மிகை முழுவை 88 ஆல் வகுக்கும் போது 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதியைக் காண்க.

தீர்வு :

a = 88q + 61

61 = 11 x 5 + 6 எனவே இதே மிகை முழுவை 11 ஆல் வகுக்கும்

போது கிடைக்கும் மீதி = 6.

கேள்வி 10.

எந்த இரு அடுத்தடுத்த மிகை முழுக்கள் சார்பகா எண்கள் என நிறுவுக.

தீர்வு :

15, 16 என்பவை அடுத்தடுத்த மிகை முழுக்கள் என்க.

இப்பொழுது 16 = 15 x 1 + 1

15 = 1 x 15 + 0

எனவே 15, 16 சார்பகா எண்கள் ஆகும்.

28, 29 என்பவை அடுத்தடுத்த மிகை முழுக்கள் என்க.

இப்பொழுது 29 = 28 x 1 + 1

28 = 1 x 28 + 0

எனவே 28, 29 என்பவை சார்பகா எண்கள். எனவே எந்த இரு அடுத்தடுத்த மிகை முழுவும் சார்பகா எண்கள் ஆகும்.