Ads

எண்களும் தொடர்வரிசைகளும் Ex 2.10-10th Std Maths-Book Back Question And Answer

எண்களும் தொடர்வரிசைகளும் Ex 2.10-10th Std Maths-Book Back Question And Answer

கேள்வி 1.

யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் ஏ மற்றும் / ஆனது a= bq +r, என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது.

அ) 1 < r < b

ஆ) 0 < r < b

இ) 0 ≤ r < b

ஈ) 0 < r ≤ b

விடை :

இ) 0 ≤ r < b

கேள்வி 2.

யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

அ) 0,1,8

ஆ) 1, 4, 8

இ) 0, 1,3

ஈ) 1, 3, 5

விடை ::

அ ) 0, 1, 8

தீர்வு :

9 ஆல் வகுபடும் மிகை முழுக்கள் 3k, 3k+1, 3k+2

(3k)3 = 27k3 + 0 = q + 0 இங்கே q = 27k3

(3k+1)3 = 27k3 + 9k2 + 3k + 1

= 3(9k3 + 3k3 + k) + 1

= 3q + 1 இங்கே q = 9k3 + 3k2 + k

(3k + 2)3 = 27k3 + 18k3 + 12k + 8

= 3(9k3 + 6k2 + 4k) + 8

= 3q+8 இங்கே ஏ = 9k3 + 6k2 + 4k

எனவே மீதிகள் 0, 1, 8

கேள்வி 3.

65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும் போது, m-யின் மதிப்பு

அ) 4

ஆ) 2

இ) 1

ஈ) 3

விடை :

(ஆ) 2

தீர்வு :

65 மற்றும் 117 ன் மீ.பொ.வ

117 = 65(1) + 52

65 = 52(1) + 13

52 = 13(4) + 0

மீதி 0 எனவே மீ.பொ.வ = 13

65m – 117 = 13

65m = 117 + 13

65m = 130

m = 13065 = 2

கேள்வி 4.

1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

அ) 1

ஆ) 2

இ) 3

ஈ) 4

இ) 3

விடை ::

இ) 3

தீர்வு :

1729 = 131 x 191 x 71

அடுக்குகளின் கூடுதல் = 1 + 1 + 1 = 3

கேள்வி 5.

1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்

அ) 2025

ஆ) 5220

இ) 5025

ஈ) 2520

விடை :

(ஈ) 2520

தீர்வு :

1 முதல் 10 வரையுள்ள எண்களின் அடுக்குக்குறி வடிவும் = 1, 2, 3, 22, 5, 21 x 31,7, 23, 32, 21 x 51

மீ.பொ.ம = 23 x 32 x 51 x 71

= 8 x 9 x 5 x 7

= 2520

கேள்வி 6.

7k = ……………………. (மட்டு 100)

அ) 1

ஆ) 2

இ) 3

ஈ) 4

விடை ::

(அ) 1

தீர்வு :

தரவு:- 74k = ………. (மட்டு 100)

k = 0, 1, 2 …. என்க

7° = 1 (மட்டு 100)

கேள்வி 7.

F1 = 1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது.

அ) 3

ஆ) 5

இ) 8

ஈ) 11

விடை :

(ஈ) 11

தீர்வு :

தரவு :- F1= 1; F2= 3

F3 = F3-1 + F3 – 2

= F2 + F1

= 3+1

F3 = 4

F4 = F4-1 + F4-2

F3 + F2

= 4 + 3

= 7

F4 = 7

F5 = F5-1 + F5-2

F4 + F3

= 7 + 4

F5 = 11

கேள்வி 8.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில் பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?

அ) 4551

ஆ) 10091

இ) 7881

ஈ) 13531

விடை :

(இ) 7881

தீர்வு :

தரவு:- a = 1, d = 4

tn = a + (n – 1) x d

= 1 + (n – 1) x 4

= 1 + 4n – 4

= 4n – 3

4n – 3 = 4551

4n = 4554 என்பது எனில் 4 ஆல் வகுபடாது

4n-3 = 10091 எனில்

4n = 10094 என்பது 4 ஆல் வகுப்படும் 4 எனவே 4n – 3 = 7881

4n = 7884 என்பது 4 ஆல் வகுப்படும் எனவே 7881 என்பது கூட்டுத்தொடர் வரிசையில் அமையும்.

கேள்வி 9.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

அ) 0

ஆ) 6

இ) 7

ஈ) 13

விடை :

தீர்வு :

தரவு:- 6t6 = 7t7

t13 = ?

6(a + (6 – 1)d) = 7(a + (7 – 1)d

6(a + 5d) = 7(a + 6d)

6a + 30d = 7a + 42d

a = -12d —-(1)

எனவே t13 = a + (13 – 1) x d

= a + 12d

= -12d + 12d ((1)-லிருந்து)

t13 = 0

கேள்வி 10.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

அ) 16 m

ஆ) 62 m

இ) 31 m

ஈ) 312 m

விடை :

(இ) 31m

தீர்வு :

தரவு:- n = 31, t16 = m

(i.e) a+15d = m —–(1)

எனவே S31 = n2 [2a + (n – 1)d]

= 312 [2a+(31-1)xd]

=312x [2a + 30d]

=312 x 2[a + 15d]

= 31m இங்கே a + 15d = m

கேள்வி 11.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

விடை :

(இ) 8

தீர்வு :

தரவு:- a = 1, d = 4

Sn = 120

n2[2a+(n-1)d] = 120

n[2+(n-1)x4] = 240 n[2+4n-4] = 240

n[4n-2] = 240

4n2 – 2n – 240 = 0

2n2 – n – 120 = 0

(2n – 16)(2n + 15) = 0

2n – 16 = 0

n = 8

கேள்வி 12.

A = 265 மற்றும் B = 264+263+262+… +2°

எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை ?

அ) B ஆனது A ஐ விட 264 அதிகம்

ஆ) A மற்றும் B சமம்

இ) B ஆனது A-ஐ விட 1 அதிகம்

ஈ) A ஆனது B-ஐ விட 1 அதிகம்

விடை :

(ஈ) A ஆனது B-ஐ விட 1 அதிகம்

தீர்வு :

A = 23 மற்றும் B = 22 + 21 + 20 என்க.

A = 8 மற்றும் B = 4 + 2 + 1 = 7

எனவே A ஆனது B ஐ விட ஒன்று அதிகம்.

கேள்வி 13.

316,18,112,118,… என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

அ) 124

ஆ) 127

இ) 23

ஈ) 181

விடை ::

ஆ) 127

விடை

(ஆ)

கேள்வி 14.

t1,t2, t3 … என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில், t6, t12, t18….. என்பது

அ) ஒரு பெருக்குத் தொடர்வரிசை

ஆ) ஒரு கூட்டுத் தொடர்வரிசை

இ) ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல.

பெருக்குத் தொடர்வரிசையுமல்ல

ஈ) ஒரு மாறிலித் தொடர் வரிசை

விடை ::

(ஆ) ஒரு கூட்டுத் தொடர்வரிசை

கேள்வி 15.

(13 + 23 + 33 +…. + 153)-(1 + 2 + 3 + … + 15)

யின் மதிப்பு

அ) 14400

ஆ) 14200

இ) 14280

ஈ) 14520

விடை :: :

(இ) 14280

தீர்வு: (3 + 23 + 33 +…. + 153) – (1 + 2 + 3 + … + 15)

= (15×162)2−(15×162)

= (120)2 – 120 =

= 14400 – 120)

= 14280