Ads

ஒலி-9th Std Science -Book Back Questions and Answers

ஒலி-9th Std Science -Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.

இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?

அ) நீட்டிக்கப்பட்ட கம்பி

ஆ) காற்றுத்தம்பம்

இ) நீட்டிக்கப்பட்ட சவ்வு

ஈ) உலோகத் தகடு

விடை::

ஈ) உலோகத் தகடு

Question 2.

காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

அ) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது

ஆ) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்போது

இ) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகரும்போது.

ஈ) அதிர்வுகள் நகரும்போது.

விடை::

ஈ) அதிர்வுகள் நகரும்போது

Question 3.

ஒரு இசைக் கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர

முடியவில்லையெனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்.

அ) மெழுகு

ஆ) வெற்றிடம்

இ) நீர்

ஈ) வெறுமையான பாத்திரம்

விடை::

ஆ) வெற்றிடம்

Question 4.

செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும் வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்.

அ) கடல் நீர்

ஆ) கண்ணாடி

இ) உலர்ந்த காற்று

ஈ) மனித இரத்தம்

விடை::

இ) உலர்ந்த காற்று

Question 5.

ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

அ) திரவங்களில்

ஆ) வாயுக்களில்

இ) திடப்பொருளில்

ஈ) வெற்றிடத்தில்

விடை::

இ) திடப்பொருளில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

ஒலி என்பது ____________________ லை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை.

விடை::

நெட்ட.

Question 2.

ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை ____________________ எனப்படும்.

விடை::

அதிர்வெண்

Question 3.

திடப்பொருளில் ஒலியின் திசை வேகமானது, திரவத்தில் உள்ள திசை வேகத்தைவிட ____________________.

விடை::

அதிகம்

Question 4.

அதிர்வுரும் பொருட்கள் ____________________ உருவாக்கும்.

விடை::

ஒலியை

Question 5.

ஒலிச் செறிவானது ____________________ ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

விடை:::

வீச்சு

Question 6.

உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி ____________________.

விடை::

இதயத்துடிப்பளவி

Question 7.

ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தளுக்கு ____________________ என்று பெயர்.

விடை::

எதிர் முழக்கம்

III. பொருத்துக.

IV. சுருக்கமாக விடையளி

Question 1.

இரும்பு மற்றும் நீர் – இவற்றில் எதன் வழியே ஒலி வேகமாகச் செல்லும்? காரணம் கூறு.

விடை::

திரவங்களை விட திண்மங்களில் ஒலி வேகமாகச் செல்லும்.

எனவே நீரை விட இரும்பின் வழியே ஒலி வேகமாக செல்லும்.

Question 2.

எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.

விடை::

அதிர்வெண்ணின் அலகு ஹெர்ட்ஸ் (Hz)

ஒரு வினாடி நேரத்தில் உண்டாகும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்

Question 3.

சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன?

விடை::

ஒரு பொருளின் வேகம் காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீ/வி) அதிகமாகும்போது அவ்வேகம் சூப்பர்சோனிக் வேகம் எனப்படும்.

Question 4.

அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?

விடை::

அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி அதைச் சுற்றி உள்ள ஊடகத் துகள்களை அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் ஒலியாக நமது செவியை அடைகின்றன.

Question 5.

நீயும் உனது நண்பணும் நிலவில் இருக்கிறீர்கள். உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்க முடியுமா?

விடை::

கேட்க முடியாது.

நிலவில் காற்று இல்லை .

ஒலி பரவ ஊடகம் தேவை.

நிலவில் ஒலி பரவ ஊடகமில்லாததால் கேட்க முடியாது.

V. விரிவாக விடையளி

Question 1.

நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள் எவ்வாறு உண்டாகின்றன? படத்துடன் விளக்குக.

விடை::

ஒரு கம்பிச் சுருளை எடுத்து முன்னும் பின்னும் நகர்த்தினால் சில பகுதிகளில் சுருள் நெருக்கமாகவும். சில பகுதிகளில் நெகிழ்வாகவும் உள்ளதை காணலாம்.

ஒலி அலைகள் இவ்வாறே செல்கின்றன.

சுருள்கள் நெருக்கமாக உள்ள பகுதி நெருக்கப் பகுதி அல்லது அழுத்தப்பகுதி எனப்படும்.

இரண்டு நெருக்கங்களுக்கிடையே சுருள் விலகி இருக்கம் பகுதி நெகிழ்வுப் பகுதி எனப்படும்.

கம்பிச்சுருள் அதிர்வுறும்போது நெருக்கமும், நெகிழ்வும் கம்பிச்சுருள் வழியே நகர்ந்து செல்லும்.

ஒலி அலைகளில் நெடுக்கம் என்பது துகள்கள் அருகருகே உள்ள பகுதி, நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தமுள்ள பகுதி.

ஒலி எந்திரவியல் நெட்டலைக்கு உதாரணம் ஆகும்.

Question 2.

ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

விடை::

எதிரொலித்தல் விதிகள் :

ஒலியின் படுகோணமும் எதிரொலிப்புக் கோணமும் சமம்

ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் செங்குத்துக் கோடு ஒரே தளத்தில் அமையும்

சோதனை :

படத்தில் உள்ளவாது ஒரே மாதிரியான இரு காகிதத்தாலான குழாய்களை எடுத்துக் கொள்க. அவற்றை மேசையின் மீது படத்திலுள்ளவாறு அமைக்கவும்.

ஒரு குழாயின் ஒரு முனையில் நிறுத்தற்கடிகாரத்தை வைக்கவும்.

மற்றொரு குழாயின் மறுமுனையை நகர்த்திக் நிறுத்துக் கடிகாரம் கொண்டே கடிகார ஓசை தெளிவாக கேட்கும்படி செய்ய மென்மையான வேண்டும்.

இப்போது படுகோணத்தையும் எதிரொலிப்பு கோணத்தையும் அளக்க வேண்டும். அவை சமமாக இருக்கும்.

படுகோண மதிப்பை மாற்றி மீண்டும் கடிகார ஓசை தெளிவாக கேட்கும்படி நகர்த்தினால் எதிரொலிப்பு கோண மதிப்பு சமமாகும்.

மேலும் ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை, அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

இவ்வாறு எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் சரிபார்க்கலாம்.

Question 3.

ஒலியின் பயன்பாடுகளைப் பட்டியலிடுக.

விடை::

மீயொலியின் பயன்கள் :

மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில் நுட்பத்தில் பயன்படுகிறது.

உலோகப் பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை கண்டறிய பயன்படுகிறது.

மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிரொலிக்கப்பட்டு இதய பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.

இதற்கு மீயொலி இதய வரைவி என்று பெயர்.

சிறுநீரக கற்களை உடைத்து சிறுநீர் வழியே வெளியேற்ற மீயொலி பயன்படுகிறது.

Question 4.

SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக.

விடை::

Sound Navigation And Ranging என்பதன் சுருக்கமே SONAR.

SONAR கருவி மூலம் மீயொலி அலைகளை செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.

பரப்பி மற்றும் உணர்வி படகு மற்றும் கப்பலுக்கு அடியில் பொருத்தப் பட்டுள்ளது.

பரப்பி மீயொலி அலைகளை உருவாக்கும். அவை நீருக்குள் பயணித்து கடலின் அடியில் உள்ள பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும்.

எதிரொலித்து வரும் ஒலி உணர்வியால் உணரப்பட்டு மின் சைகைகளாக மாற்றுகின்றது. அதிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன.

நீரில் ஒலியின் திசைவேகம், பரப்பப்பட்ட ஒலி மற்றும் பெறப்பட்ட ஒலிக்கு இடையேயான கால இடைவெளி ஆகியவற்றை கணக்கிட்டு பொருளின் தொலைவை கணக்கிடலாம்.

2d = v x t

VI. கணக்கீடுகள்

Question 1.

ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?

விடை::

ஒலியின் அதிர்வெண் n = 600 Hz

ஒரு வினாடிக்கு 600 அதிர்வுகள் ஏற்படுத்தும்.

1 நிமிடம் = 60 நொடி

ஒரு நிமிடத்தில் அதிர்வுகளின் எண்ணிக்கை

= 600 x 60

= 36000 Hz

=36 kHz

Question 2.

750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால், குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா?

(கொடுக்கப்பட்டுள்ளவை g= 10 மீ/வி, ஒலியின் வேகம் = 340 மீ/வி)

விடை::

குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுர உச்சியில் கேட்க இயலாது.

உயரம் (S) = 750 மீ g= 10 மீ/வி

வேகம் (v) = 340 மீ/வி

மீண்டும் ஒலியை கேட்பதற்கான

t2 = 2.21 விநாடி

மொத்த நேரம் t = t1 + t2

= 12.25 + 2.21

= 14.46 விநாடிக்குப் பின் ஒளியைக் கேட்க முடியும்.

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.

ஒலி அலைகள் …………………………….. ல் பரவ முடியாது.

விடை::

வெற்றிடத்தில்

Question 2.

…………………………….. பொருளை அதிர்வடையச் செய்கிறது.

விடை::

இயந்திர ஆற்றல்

Question 3.

கம்பிச்சுருள் அதிர்வுறும் போது …………………………….. தோன்றும்.

விடை::

நெருக்கம், நெகிழ்வு

Question 4.

ஒலி ஒரு …………………………….. அலை ஆகும்.

விடை::

நெட்டலை

Question 5.

அழுத்தம் குறைந்த பகுதி …………………………….. ஆகும்.

விடை::

நெகிழ்வு

Question 6.

ஊடகத் துகள்கள் நடுநிலைப்புள்ளியிலிருந்து அடையும் பெரும இடப் பெயர்ச்சி …………………………….. ஆகும்.

விடை::

வீச்சு

Question 7.

ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை ……………………………. .

விடை::

அதிர்வெண்

Question 8.

20Hz க்கு குறைவான ஒலி ……………………………. .

விடை::

குற்றொலி

Question 9.

20000Hz க்கு அதிகமான ஒலி ……………………………. .

விடை::

மீயொலி

Question 10.

அதிர்வெண்ணின் எதிர்த்தகவு ……………………………. .

விடை::

அலைவுக்காலம்

Question 11.

ஒரு வினாடியில் ஒலி கடக்கும் தொலைவு ……………………………. .

விடை::

திசைவேகம்

Question 12.

அலை நீளத்தின் SI அலகு ……………………………. .

விடை::

மீட்டர்

Question 13.

அலைவுக் காலத்தின் SI அலகு ……………………………. .

விடை::

வினாடி

Question 14.

அதிர்வெண்ணின் SI அலகு ……………………………. .

விடை::

ஹெர்ட்ஸ் (Hz) அல்லது S-1

Question 15.

நம் காதுகளால் கேட்க முடியாத ஒலி ……………………………. .

விடை::

மீயொலி, குற்றொலி

Question 16.

ஒளியின் திசைவேகத்தின் அலகு ……………………………. .

விடை::

மீவி-1

Question 17.

கேட்டல் திறனை பாதிக்கும் ஒலி அளவு ……………………………. .

விடை::

90 dB க்கு மேல்

Question 18.

ஒலிச் செறிவின் அலகு ……………………………. .

விடை:::

(dB) டெசிபல்

Question 19.

ஒலி கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை கண்டறியும் பண்பு ……………………………. .

விடை::

சுருதி

Question 20.

ஒரே அதிர்வெண்ணைக் கொண்ட ஒலி …………………………….. எனப்படும்.

விடை::

தொனி

Question 21.

பல்வேறு தொனிகளின் தொகுப்பு ……………………………. .

விடை::

இசைக்குறிப்பு (Note)

Question 22.

தொனி என்பதை வேறுபடுத்தும் பண்பு ……………………………. .

விடை::

சுரம்

Question 23.

ஒலியின் வேகம்ல் …………………………….. மிகக் குறைவு.

விடை::

வாயு

Question 24.

வெப்பநிலை அதிகரித்தால் …………………………….. ன் வேகம் அதிகரிக்கும்.

விடை::

Question 25.

0°ல் ஒலியின் வேகம் …………………………….. மீ/வி.

விடை::

330

Question 26.

கடல் நீரில் ஒலியின் வேகம் …………………………….. மீ/வி.

விடை::

5500

Question 27.

ஒலி காற்றைவிட …………………………….. மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும்.

விடை::

5

Question 28.

காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிகமான பொருளின் வேகம் …………………………….. எனப்படும்.

விடை::

மீயொலி வேகம்

Question 29.

மீயொலி வேகத்தில் செயல்படுபவை …………………………….. , ……………………………..

விடை:::

துப்பாக்கி குண்டு, ஜெட் விமானம்

Question 30.

உடலில் உண்டாகும் ஒலிகளை கேட்க உதவும் கருவி ……………………………. .

விடை::

இதயத்துடிப்பளவி

Question 31.

இனிமையற்ற மற்றும் தேவையற்ற ஒலி …………………………….. எனப்படும்.

விடை::

இரைச்சல்

Question 32.

எதிரொலியை தெளிவாக கேட்க குறைந்தபட்ச தொலைவு …………………………….. மீ.

விடை::

17 மீ

Question 33.

மேகங்களின் மீது படும் ஒலி அலைகளின் தொடர் எதிரொலிப்பால் …………………………….. ஏற்படும்.

விடை::

இடி முழக்கம்

Question 34.

பன்முக எதிரொலிப்பால் ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை …………………………….. எனப்படும்.

விடை::

எதிர் முழக்கம்

Question 35.

மனித உடல் உறுப்புகளை ஆராய …………………………….. பயன்படுகிறது.

விடை::

மீயொலி

Question 36.

எலி, திமிங்கலம், வௌவால் போன்றவை தகவல் பரிமாற்றத்திற்கு …………………………….. ஐ பயன்படுத்துகின்றன.

விடை::

மீயொலி

Question 37.

சிறுநீரக கற்களை உடைக்க …………………………….. பயன்படுகிறது.

விடை::

மீயொலி

Question 38.

கடல் கண்காணிப்பில் பயன்படுவது ……………………………. .

விடை::

மீயொலி

Question 39.

SONAR என்பதன் விரிவாக்கம்.

விடை:::

Sound Navigation And Ranging

Question 40.

SONAR மீயொலி அலைகளை தோற்றுவிப்பது ……………………………. .

விடை:::

பரப்பி

Question 41.

SONAR மீயொலி அலைகளை மின்சார சைகைகளாக மாற்றுவது ……………………………. .

விடை::

உணர்வி

Question 42.

கடலின் ஆழம் கண்டறிய பயன்படுவது ……………………………. .

விடை:::

SONAR

Question 43.

இதய செயல்பாடுகளை குறிப்பிட்ட நேரம் பெருக்கமடையச் செய்து பதிவு செய்யும் முறை …………………………….. எனப்படும்.

விடை::

ECG

Question 44.

நடுச் செவியிலுள்ள மூன்று எலும்புகள் …………………………….. , …………………………….. மற்றும் ……………………………. .

விடை::

சுத்தி, பட்டை, அங்கவடி

Question 45.

செவிக்குழாயின் முடிவில் …………………………….. உள்ளது.

விடை::

செவிப்பறை

Question 46.

செவியின் வெளிப்பகுதி ……………………………. .

விடை::

செவி மடல்

Question 47.

முன்னோக்கிச் செல்லும் அதிர்வே …………………………….. எனப்படும்.

விடை::

அலை

Question 48.

ஒலி என்பது …………………………….. ஒரு உதாரணமாகும்

விடை::

எந்திரவியல் நெட்டலைக்கு

Question 49.

…………………………….. பறவைகள் குறைந்த அதிர்வெண் கொண்ட மீயொலிகளைப் பயன்படுத்துகின்றன

விடை::

எண்ணெய்

Question 50.

ஒலியானது ஒளியைவிட …………………………….. வேகத்திலேயே செல்கிறது.

விடை::

மிகக்குறைவான

II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை

சரியானதை தோர்ந்தெடுத்து குறிக்க:

(a) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமாகும்.

(b) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமல்ல.

(c) கூற்று (A) சரி காரணம் (R) தவறு

(d) கூற்று (A) சரி காரணம் (R) சரி

Question 1.

கூற்று (A) : 20000 Hz க்கு அதிகமான ஒலி மீகையொலி அல்லது மீயொலி எனப்படும்.

காணரம் (R) : இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் உணர முடியாது

விடை::

(a) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமாகும்.

Question 2.

கூற்று (A) : வானில் மழை பெய்யும் போது முதலில் மின்னலை காண்கிறோம்.

காணரம் (R) : ஒலியானது ஒளியைவிட மிக குறைந்த வேகத்தில் செல்கிறது

விடை::

(a) கூற்றும் காரணமும் சரி காரணம் R ஆனது கூற்று A க்கு சரியான விளக்கமாகும்.

Question 3.

கூற்று (A) : ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர்முழக்கம் எனப்படும்.

காணரம் (R) : எதிர்முழக்கத்தின் காரணமாக இடி தோன்றுகிறது.

விடை::

(c) கூற்று (A) சரி காரணம் (R) தவறு

IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.

ஒளி : குறுக்கலை : : ஒலி : ______________________

விடை::

நெட்டலை

Question 2.

கட்டிடங்கள் : எதிரொளி : : எதிர் முழக்கம் : ______________________

விடை:::

திரையரங்கு

Question 3.

அலை நீளம் : மீட்டர் : : அலை நேரம் : ______________________

விடை::

வினாடி

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.

வீச்சு என்றால் என்ன?

விடை::

ஒலி ஒரு ஊடகத்தின் வழியே செல்லும்போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியிலிருந்து அடையும் பெரும் இடப்பெயர்ச்சி.

இதன் அலகு மீட்டர்.

Question 2.

ஒலிச் செறிவு என்றால் என்ன?

விடை::

ஒரு வினாடி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பரப்பு வழியே கடந்து செல்லும் ஒலி ஆற்றலின் அளவு.

SI அலகு டெசிபல் (dB)

Question 3.

ஒலிச் செறிவு சார்ந்துள்ள காரணிகள் யாவை?

விடை::

ஒலி மூலத்தின் வீச்சு

ஒலி மூலம், கேட்பவர் இடையே உள்ள தொலைவு

ஒலி மூலத்தின் பரப்பு

ஊடகத்தின் அடர்த்தி 5. ஒலி மூலத்தின் அதிர்வெண்

Question 4.

சுருதி என்றால் என்ன?

விடை::

சுருதி என்பது ஒரு ஒலியானது கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பு.

Question 5.

வாயுவில் ஒலியின் வேகம் சார்ந்த காரணிகள் யாவை?

விடை::

ஊடகத்தின் அழுத்தம்

ஊடகத்தின் வெப்பநிலை

ஊடகத்தின் அடர்த்தி

வாயுவின் தன்மை

Question 6.

ஒலி எதிரொலித்தல் விதிகள் யாவை?

விடை::

ஒலி ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமம்.

ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

Question 7.

இதயத் துடிப்பளவி என்றால் என்ன?

விடை::

இதயத்துடிப்பளவி உடலில் உண்டாகும் ஒலிகளைக் கேட்க உதவும் மருத்துவக் கருவி.

உடலில் தோன்றும் ஒலி இக்கருவியில் உள்ள இணைப்புக் குழாயில் பலமுறை எதிரொலிப்படைந்து மருத்துவரின் செவியை அடைகிறது.

Question 8.

இரைச்சல் என்றால் என்ன?

விடை::

இரைச்சல் என்பது இனிமையற்ற மற்றும் தேவையற்ற ஒலியாகும்.

ஒலியின் செறிவு 120dB விட அதிகமாகும்போது செவிக்கு வலியை உண்டாக்கும்.

Question 9.

சோனாரின் (Sonar) பயன்கள் யாவை?

விடை:::

கடலின் ஆழம் கண்டறியவும், நீரின் அடியிலுள்ள குன்றுகள், சமவெளிகள், நீர்மூழ்கி கப்பல் மற்றும் பனிப்பாறைகளைக் கண்டறியப் பயன்படுகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.

ஒலி பரவ ஊடகம் தேவை என்பதை மணிச்சாடி சோதனை கொண்டு விளக்குக.

விடை::

ஒரு மின்சார மணியை, ஒரு மணிச்சாடியினுள் படத்தில் காட்டியவாறு இணைக்கவும்.

ஜாடி ஒரு வெற்றிடமாக்கும் பம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மணியை ஒலிக்கச் செய்யும் போது நாம் ஒலியை கேட்கிறோம்.

பம்பின் உதவியுடன் காற்றை சிறிது சிறிதாக வெளியேற்றும் போது ஒலியின் அளவும் குறையும்.

காற்றை முற்றிலும் வெளியேற்றிய பிறகு ஒலி கேட்பதில்லை. காற்றை மீண்டும் செலுத்தினால் ஒலியை கேட்கலாம்.

எனவே ஒலி பரவ ஊடகம் தேவை என்பதை அறியலாம்.

Question 2.

எதிர் முழக்கம் என்றால் என்ன? பெரிய அரங்குகளில் எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய வேண்டியன யாவை?

விடை::

பெரிய அரங்குகளில் ஏற்படுத்தப்படும் ஒலி சுவர்களில் பட்டு மீண்டும் எதிரொலிப்பு அடைந்து கேட்கும் தன்மை சுழியாகும்வரை நீடித்திருக்கும்.

பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் – நீடித்திருக்கும் தன்மை எதிர்முழக்கம் எனப்படும். Samacheer Kalvi 9th Science Guide Chapter 8 ஒலி

எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய வேண்டியவை:

அரங்கத்தின் சுவர்கள், மேற்கூரைகள் போன்றவை ஒலியை உட்கவரும் பொருட்களான நார் அட்டை, திரைச்சீலை, பிளாஸ்டர் போன்றவற்றால் மூடப்பட்டிருக்கும்.

பார்வையாளர் அமரும் இருக்கைகள் ஒலியை உட்கவரும் பண்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

Question 3.

மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.

விடை::

செவியின் வெளிப்பகுதி செவி மடல். இது சுற்றுப்புறத்திலிருந்து ஒலியை சேகரித்து வெளிச் செவிக்குழாய் மூலம் உள்ளே செல்கிறது.

வெளிச் செவிக் குழாயின் முடிவில் செவிப்பறை உள்ளது.

காற்று ஊடகத்தில் நெருக்கம் உண்டாகும் போது செவிப்பறையின் வெளிப்பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் செவிப்பறை உள்புறம் தள்ளப்படும்.

காற்றில் நெகிழ்வு உண்டாகும்போது செவிப்பறை வெளிப்புறம் தள்ளப்படும்.

இவ்வாறு செவிப்பறை அதிர்வடையும்.

இந்த அதிர்வு நடுச்செவியிலுள்ள சுத்தி, பட்டை, அங்கவடி எலும்புகளால் பலமுறை பெருக்கப்பட்டு உட்செவிக்கு கடத்தப்படும்

கடத்தப்பட்ட அழுத்த வேறுபாடு காக்ளியா மூலம் மின்சைகைகளாக மாற்றப்பட்டு மூளைக்கு செலுத்தப்படுகிறது.

மூளை இவற்றை ஒலியாக உணர்கிறது.

VII. கணக்குகள்

Question 1.

கப்பலிலிருந்து அனுப்பப்படும் மீயொலி கடலுக்கடியில் பொருளில் பட்டு 4.28 வினாடியில் மீண்டும் வந்தடைகிறது. கடல் நீரில் மீயொலியின் வேகம் 1531 மீ/வி எனில் கடலின் ஆழம் எவ்வளவு?

விடை:::

வேகம் v = 1531 மீ/வி

நேரம் t = 4,28 வி

மீயொலி கடந்த தொலைவு = 2 x கடலின் ஆழம்

தொவு = வேகம் x நேரம்

2d = v xt

= 1531 x 4.28

d=6552.682 = மீ

கடலின் ஆழம் = 3276.3 மீ

Question 2.

0°C ல் 30 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலியின் அலை நீளம் என்ன?

விடை::

O°C ல் ஒலியின் வேகம் (v) = 330 மீ/வி

அதிர்வெண் (n) = 30KHz

= 30000 Hz

= 3 x 104 Hz

அலை நீலம் λ=vT=3303×104 = 110 x 10-4

λ = 11 x 10-3 மீ

Question 3.

இரு பெரிய கட்டடங்களுக்கிடையே நின்று கை தட்டும்போது 4 வினாடிக்கு பிறகு எதிரொலியை கேட்டால், இரு கட்டடங்களுக்கிடையேயான தொலைவு என்ன?

(ஒலியின் வேகம் 330 மீ/வி என்க)

விடை::

v= 330 மீ/வி

t = 4

தொலைவு d = v x t

= 330 x 4 = 1.32 கி.மீ

நபரிடமிருந்து சென்று பட்டு மீண்டும் ஒலி வருவதால் தொலைவு = 13202 = 660 மீ